உடலுறவில் இந்த பொசிஷன்களில் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்ப்பு அதிகரிக்கும்.. ஏன் தெரியுமா?

First Published | Jan 23, 2023, 7:06 PM IST

தம்பதியினர் உடலுறவு கொள்ளும் போது சில பொசிஷன்களில் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்து இங்கு காணலாம். 

திருமணமான தம்பதியினர் சிலர் உடனடியாக கர்ப்பம் தரிக்க வேண்டும் என விரும்புவர். சிலர் சில காலம் புரிதலோடு வாழ்ந்துவிட்டு குழந்தை பெற்று கொள்ளலாம் என நினைக்கிறார்கள். இருவருக்கும் எந்த செக்ஸ் பொசிஷன்களில் கர்ப்பம் தரிக்கும் என்ற புரிதல் இருக்க வேண்டியது அவசியம். 

கர்ப்பம் தரிக்க விரும்பினால் ஒவலேஷனின் போது கட்டாயம் உடலுறவு கொள்ள வேண்டும். ஒவலேஷனுக்கு முன்பிருந்தே உடலுறவு கொள்ள தொடங்கி அதிகமுறை உறவு கொள்ள வேண்டும். உணவு பழக்கம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பெண்கள் கார்டியோ உடற்பயிற்சியை செய்யாமல் இருக்கலாம். புகை, மது ஆகிய பழக்கங்களை தவிர்க்க வேண்டும். இதையெல்லாம் விட முக்கியம் உடலுறவு கொள்ளும் பொசிஷன். இது கரு உருவாகும் வாய்ப்புகளில் பங்கு வகிக்கிறது. 


கர்ப்பமாக விரும்பும் தம்பதியினர் உடலுறவு கொள்ள சிறந்த நேரத்தை அறிய மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்க வேண்டும். அண்டவிடுப்பு (ஓவலேஷன்) எப்போது இருக்கும் என்பதை அறிந்து கொண்டு அந்த நாளுக்கு 5 தினங்கள் முன்னதாகவும், அண்டவிடுப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்ட நாளிலும் உறவு கொள்ள வேண்டும். உடலுறவு வைத்து கொள்ள தொடங்கிய நாளிலிருந்து, பாசிட்டிவ் வரும் வரை கிட்டத்தட்ட 78 முறை தம்பதிகள் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். 

பெண்ணின் கருப்பை முதிர்ச்சியடைந்த முட்டையை வெளியிடும் ஓவலேஷனின் போது, உறவு கொண்டால் பெண்ணின் உடலுக்குள் ஆயிரக்கணக்கான விந்தணுக்கள் செல்லும். இப்படி விந்தணு கருமுட்டைக்குள் செல்வதால் கர்ப்பம் ஏற்படுகிறது. முக்கியமாக விந்தணு யோனிக்குள் நுழைவதை உறுதி செய்வது கருத்தரிக்க அவசியம். 

தினமும் பலமுறை உறவு கொள்வதால், கருத்தரிக்கலாம் என நம்புவது உண்மையல்ல. ஒரு நாளைக்கு ஒரு முறையே உடலுறுவு வைத்தால் போதும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரே நாளில் மீண்டும் மீண்டும் உறவு வைத்துக்கொள்ளும் போது ஆண்கள் ஆரோக்கியமான விந்தணுக்களின் எண்ணிக்கையை இழக்கிறார்கள். இதனால் 2 தினங்களுக்கு ஒருமுறை உறவு வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எந்த பொசிஷன் சிறந்தது? 

டாகி ஸ்டைலில் (Doggy style) கருத்தரிக்க வாய்ப்புள்ளது. ஆய்வின்படி, இதனை 36% தம்பதிகள் முயற்சி செய்து பார்க்கிறார்கள் என தெரிய வந்துள்ளது. மிஷனரி பொசிஷனிலும் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம். கவ் கேர்ள் பொசிஷன், 69 நிலை, ட்ரை ஹம்பிங் பொசிஷன்களில் கருத்தரிக்க வாய்ப்பு குறைவாக உள்ளது எனவும் கூறப்படுகிறது. 

Latest Videos

click me!