குளிர்காலங்களில் தலை முடி தொடர்பான பிரச்சனைகள் வாடிக்கையாகிவிட்டது. பொடுகு உங்களுடைய சருமத்தை அரிக்கும். சிலருக்கு முகத்தில் பருக்கள் உண்டாகும். அறிவியல்ரீதியாக சொல்ல வேண்டுமெனில் பொடுகு என்பது அழற்சியற்ற, நாள்பட்ட நிலையாகும். இது உச்சந்தலையில் வரும் பொதுவான தோல் நோயாகும். இதனால் உச்சந்தலை திசு பெரிதும் பாதிக்கப்படுகிறது.
பொடுகுக்கு காரணம்
பொடுகுக்கு பல காரணங்கள் உண்டு. நமது தலையில் உள்ள எண்ணெய் பசை, மோசமான பராமரிப்பு ஆகிய காரணங்கள் பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும். உச்சந்தலையில் வாழும் ஒரு குறிப்பிட்ட வகை பூஞ்சையின் அதிகப்படியான வளர்ச்சி பொடுகை ஏற்படுத்தும். ஆனால் பொடுகை முற்றிலும் குறைக்க சில பயனுள்ள குறிப்புகள் உள்ளன.
வேம்பு சாறில் தீர்வு
உச்சந்தலையை சுத்தம் செய்ய வேம்பு சாறு மிகவும் உதவியாக இருக்கும். இதனால் முடி வளர்ச்சியையும் மேம்படும். பொடுகால் தலையில் அடைபட்ட துளைகளை அழிக்கிறது. வேப்பம்பூவின் பண்புகள் பொடுகைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். வேப்ப இலைச்சாற்றை உச்சந்தலையில் நன்கு தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் பொடுகு ஒழியும்.
மனதை இளகுவாக மாற்றுங்கள்
நம்முடைய மன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. பொடுகை ஏற்படுத்தும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் உங்கள் உடலின் திறனையும் குறைக்கிறது. அடிக்கடி ஏற்படும் மன அழுத்தத்தாலும் பொடுகு ஏற்படுகிறது. மன அழுத்தத்தைக் குறைக்க நடைப்பயிற்சி அல்லது யோகா, தியானம் செய்யுங்கள். மேற்கண்ட இரண்டு டிப்ஸில் ஏதேனும் ஒன்றை செய்வதோடு, மன அழுத்தத்தையும் குறைத்தால் பொடுகு தொல்லை காணாமல் போகும்.
தலையில் உள்ள பொடுகு பிரச்சனை தீர இரசாயன மருந்துகளை விட இயற்கை வைத்தியம் சிறந்தது. இவை முடியைப் பாதுகாக்கிறது. பொடுகினால் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கிறது. இது பூஞ்சை தொற்றுகளையும் தடுக்கிறது. முயன்று பாருங்கள்.
இதையும் படிங்க: அம்பானியின் இளைய மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டின் தாய் யார் தெரியுமா? மகளுக்கு போட்டியாக அவர் செய்த காரியம்..