வறண்ட உதடுகளை ஈரப்பதத்துடன் மாற்றும் எளிய டிப்ஸ்..!!

First Published | Jan 18, 2023, 4:44 PM IST

உங்கள் உதடுகள் மிகவும் வறண்டிருந்தால், அதற்கு வீட்டிலுள்ள சில பொருட்களை வைத்து எளிதில் தீர்வு காண முடியும். அதற்கான வழிமுறைகளை விரிவாக தெரிந்துகொள்வோம்.
 

dark lips

உங்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், சருமம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் ஒன்று தான் உதடுகள் அடிக்கடி வறண்டு போவது. உடலின் மற்ற பகுதிகளில் உள்ள தோலை விட உதடுகளில் உள்ள தோல் மிகவும் மென்மையானது. அதன்காரணமாகவே உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், உதடுகளில் பாதிப்பு தெரியும். குறிப்பாக குளிர்காலத்தில் உதடுகளில் வெடிப்பு அதிகமாக காணப்படும். நீரிழப்பு அல்லது உடலில் போதுமான நீர் இல்லாத நிலைகளிலும் இது ஏற்படலாம். உங்களுடைய உதடுகள் வறண்டு போயிருந்தால், அதை வீட்டு வைத்திய முறைகளில் சரிசெய்யக் கூடிய தகவல்களை குறித்து விரிவாக பார்க்கலாம்

lips

தேங்காய் எண்ணெய்

வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் வைத்திருந்தால், அதை உங்களுடைய உதடுகளில் தொடர்ந்து தடவி வாருங்கள். காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு சாப்பாட்டுக்கு பிறகு இப்படி செய்யுங்கள். இதன்மூலம் நீண்ட நேரம் உங்களுடைய உதட்டில் தேங்காய் எண்ணெய் இருக்கும். இதனால் வெடிப்பு ஏற்படுவது குறைந்து, உதடுகள் இயல்புநிலையை அடையும்.
 

Tap to resize

pink lips

ஆமணுக்கு எண்ணெய்

ஒருவேளை உங்களுக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் கிடைக்கவில்லை என்றால், ஆமணுக்கு எண்ணெய்யை வாங்கலாம். இது கடைகளில் கூட கலப்பிடமில்லாமல் தான் கிடைப்பதாக கூறப்படுகிறது. ஆமணுக்கு எண்ணெய் உதடுகளுக்கு மிகவும் நல்லது மற்றும் இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படும்.
 

கற்றாழை

அழகு பரமாரிப்பு கொண்டவர்கள் கற்றாழையின் மருத்துவ குணங்கள் பற்றி கேள்விப்படாமல் இருக்க முடியாது. இது முக்கியமாக தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை வளர்க்கிறது. கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவுவது இறந்த செல்களை அகற்றி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி, ஈரப்பதத்தைத் தக்கவைக்கும். இது மிகவும் இயற்கையான தீர்வுகளில் ஒன்றாகும்.
 

தேன்

பொதுவாக வறண்டு போன உதடுகளை சீரமைக்க பலரும் வாஸ்லைனை தடவுகின்றனர். அதை பூசுவதற்கு முன்னர் சிறிது தேனை தடவினால் பலன் இரட்டிப்பாகும். தேனில் பல மருத்துவ குணங்கள் உள்ளதை நாம் அறிவோம். தேன் ஒரு இயற்கை மாய்ஸ்சரைசராகவும் அறியப்படுகிறது. சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து, எப்போதும் உதட்டுப்பகுதியை நீரேற்றமாக வைத்துகொள்கிறது.

Latest Videos

click me!