Long hair care: நீண்ட கூந்தலைப் பராமரிக்க அசத்தலான டிப்ஸ் இதோ உங்களுக்காக!

First Published Jan 16, 2023, 6:19 PM IST

கூந்தல் பராமரிப்பிற்கு, கண்ட கண்ட எண்ணெய்களை பயன்படுத்தாமல், இயற்கையான முறையில் கூந்தல் பராமரிப்பு முறைகள் பற்றி இப்போது இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

hair care

பொதுவாக பல பெண்களுக்கு கூந்தல் மிக நீளமாக காணப்படும். சிலருக்கு கூந்தலின் நீளம் குறைவாக இருக்கும். கூந்தலின் நீளத்தை அதிகப்படுத்த பலரும் பல முயற்சிகளை செய்து வரும் நிலையில், இருக்கும் கூந்தலை முறையாக எப்படி பராமரிக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில், கூந்தல் பராமரிப்பிற்கு, கண்ட கண்ட எண்ணெய்களை பயன்படுத்தாமல், இயற்கையான முறையில் கூந்தல் பராமரிப்பு முறைகள் பற்றி இப்போது இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

hair care

கூந்தல் பராமரிப்பு

நீளமான கூந்தலை வளர்க்க வேண்டும் என்பது தான் அனைத்துப் பெண்களின் ஆசையாக இருக்கும். ஆனால் ஒரு சிலருக்குத் தான், நீண்ட கூந்தல் இயற்கையாகவே அமைகிறது. முடி உதிர்வு பிரச்சனையைப் பற்றிய கவலையே இல்லாமல் கூந்தலை நீளமாக வளர்த்து கொண்டே இருப்பார்கள். நீளமான கூந்தல் வைத்திருக்கும் பெண்கள் சந்திக்கும் பெரும் பிரச்சினை என்னவென்றால், முடி உதிர்வு தான். பொடுகுத் தொல்லை, அதிகப்படியான எண்ணெய் பயன்பாடு மற்றும் வறட்சியான ஸ்கால்ப் போன்றவையே இதற்கு மிக முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. உண்மையில் நீளமான கூந்தலைக் கொண்ட பெண்கள், ஒரு சில பராமரிப்புகளை கட்டாயம் மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அவற்றைத் தொடர்ந்து சரி வர செய்தாலே போதும். கூந்தல் முடி உதிர்வைத் தடுத்து, தலைமுடியை பாதுகாக்க முடியும்.

hair care

நீண்ட கூந்தலுக்கு கண்டிப்பாக பராமரிப்பு தேவை. நீண்ட கூந்தலுடன் இருக்க ஆசைப்பட்டால் கூந்தலுக்குரிய பராமரிப்பும் அவசியம். ஏனெனில், கூந்தல் வளர்ச்சியில் கூந்தல் நுனி பிளவு, கூந்தல் உடைப்பு, முனைகள் மெலிந்து போவது மற்றும் முடி உதிர்வது போன்ற பிரச்சனைகளும் உருவாக கூடும். இதனை எல்லாம் தவிர்க்க சீரான தலைமுடி பராமரிப்பு அவசியம்.

hair care

கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்

நீண்ட கூந்தலைக் கொண்ட பெண்கள் குறுகிய பற்கள் கொண்ட சீப்பைக் கொண்டு தலைமுடியை சீவுவது நல்லது. 

இரவு நேரத்தில் தூங்கச் செல்வதற்கு முன்பாக, கூந்தலை நன்றாக வாரி பின்னிக் கொண்டு தூங்க செல்லுங்கள். 

ஒரு வாரத்திற்கு இரண்டு முறை இரசாயனங்கள் கலக்காத ஷாம்புவை உபயோகப்படுத்தி, தலையை சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலமாக தலைமுடி உதிர்தல் மற்றும் தலைமுடி சேதம் அடைதலைத் தடுக்க முடியும்.

அவ்வப்போது  தலையில் எண்ணெய் பூசி மென்மையாக மசாஜ் செய்வது மிகவும் முக்கியமானது. குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் தலையில் மசாஜ் செய்வது நல்ல பலன்களைத் தரும்.

தலைக்கு குளித்த உடனேயே தலைமுடியை காய வைக்க வேண்டும். ஆகவே, ஒரு டவல் மூலம் தலையைச் சுற்றி காய வைக்கலாம் அல்லது தலைமுடியை காற்றில் உலர விடலாம்.  

click me!