நம்முடைய உடல் ஆரோக்கியம் பெறும் நோக்கில் பல உணவுகளை எடுத்து கொள்கிறோம். ஆனாலும் என்ன செய்தாலும் சிலருக்கு முடி உதிர்தல் பிரச்சனை தீரவே தீராது. ஆரோக்கியமான உணவுகள், விதவிதமான எண்ணெய் என பல விஷயங்களை முயன்றும் அதில் தோல்வியே கிடைத்திருக்கும். அவர்களுக்கு வெங்காயம் நல்ல பயன் தரும். அதை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.
முடி உதிர்தலை கட்டுப்படுத்த வெங்காயத்தை விட சிறந்த உணவு கிடையாது. தினமும் வெங்காயம் சாப்பிட்டு வந்தால் முடி நன்கு வளரும். தோல் பிரச்சனை இருந்தாலும் தீரும். ஏனெனில் வெங்காயத்தில் வைட்டமின் சி, போலேட், வைட்டமின் பி6, பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளது.
வெங்காய சாறு எப்படி தயாரிக்கலாம்?
சின்ன வெங்காயத்தை உரித்து மிக்ஸியில் போன்று மையாக அரைத்து கொள்ளுங்கள். ஒரு மென்மையான துணியால் அதனை வடிகட்டி தண்ணீர் படாத உலர்ந்த டப்பாவில் சேமித்து ப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். வாரத்திற்கு இருமுறை தலைக்கு தேய்த்து குளியுங்கள். வெங்காயம் குளிர்ச்சி என்பதால் தினமும் தேய்த்து குளிக்கக் கூடாது.
கவனம்!
1). வெங்காயச் சாறு வெறுமனே உச்சந்தலையில் தடவினால் எரிச்சலை உண்டால்கும். கற்றாழை அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது தேன் ஆகிய ஏதேனும் ஒரு பொருளில் கலந்து தேய்த்து வாருங்கள்.
2). உங்களுக்கு வெங்காய சாறு தேய்த்த பிறகு அலர்ஜி வந்தால் மருத்துவரை உடனடியாக அணுகி ஆலோசனை பெறுங்கள்.
இதையும் படிங்க: Pongal 2023: பொங்கல் அன்று எள்ளு தண்ணீரில் குளிக்க வேண்டும் ஏன்? எதற்காக?