பொங்கல் விழாவில் அழகாகவும், தனித்துவமாகவும் கலந்து கொள்ளவே நாம் அனைவரும் விரும்புவோம். அதற்கு அதிகம் கூட மெனக்கெட வேண்டாம் வீட்டில் உள்ள பொருள்களுடன் கொஞ்சம் தேன் கலந்து முகத்தில் பூசினால் போதும். தேனில் முகத்தின் அழகு, மென்மையைத் தக்க வைக்கும் திறன் உள்ளது. முகத்தில் உள்ள தழும்புகள், கரும்புள்ளிகளை அறவே நீக்கிவிடும். இந்த அற்புத பலன் கொண்ட தேன் குறித்து காணலாம்.
தேனும் எலுமிச்சையும்!
முகத்தை டல்லாக காட்டும் கருமை நிறம் அல்லது பழுப்பு நிற சருமத்தை மாற்ற எலுமிச்சை துண்டை, தேனில் தோய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர ஒரு வாரத்தில் கருமை நீங்கி பளபளப்பு கிடைக்கும்.
தேனும் பாலும்!
காலையில் நம் வீட்டில் பயன்படுத்தும் பாலில் கொஞ்சம் எடுத்து கொண்டு அதனுடன் தேன் கலந்து, அக்கலவையால் நாள்தோறும் முகம் கழுவி வந்தால் மாற்றம் தெரியும். இளமையாக இருக்க இந்த முறை உதவும்.
தேனும் தக்காளியும்!
ஆயில் ஸ்கின்னால் அவதியுறுபர்கள் இந்த முறையை பின்பற்றலாம். தேனுடன் தக்காளியை அரைத்து கலந்து பேஸ் பேக் மாதிரி போட்டு கொள்ளுங்கள். முகத்தில் பூசிய பிறகு 20 நிமிடம் ஊறவிடுங்கள். நன்கு உலர்ந்ததும் மிதமான சூடுள்ள நீரில் கழுவினால் புத்துணர்வாக இருக்கும். பொங்கல் பண்டிகையில் பொலிவான சருமம் பெற இந்த டிப்ஸை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
இதையும் படிங்க; Pongal 2023: இந்த ஆண்டு பொங்கல் வைக்க சரியான நேரம் எப்போது? இதோ முழுதகவல்கள்!