Bamboo Extracts: அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்க வேண்டுமா? மூங்கில் சாறு ட்ரை பண்ணி பாருங்க!

First Published Jan 10, 2023, 3:52 PM IST

bamboo extracts: மூங்கிலில் இருந்து பெறப்படும் பொருள்கள் சரும பிரச்சனைகளை எவ்வாறு போக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம். 

ஆண்களை விடவும் பெண்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால் தான் சரும பராமரிப்பு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். இதற்கு மூங்கில் சாறு பயனுள்ளதாக இருக்கும். இது பல தோல் பராமரிப்பு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. பொலிவான சருமத்தினை பெற மூங்கில் சாறு எவ்வாறு உதவுகிறது என்பதை இங்கு காணலாம். 

பொலிவான சருமம்!

எங்கு போனாலும் தனித்தும், அழகாகவும் தெரிய வேண்டும் என விரும்புபவர்களுக்கு இரட்டிப்பு அழகை மூங்கில் சாறு வழங்கும். இதில் 70 விழுக்காடு சிலிக்கா உள்ளது. இது கிளைகோசமினோ, கிளைகான்களின் (GAG) தொகுப்பை ஆதரிப்பதால், சருமத்தில் உள்ள ஈரப்பத இழப்பைத் தடுக்கிறது. 

பாக்டீரியா எதிர்ப்பு

மூங்கில் சாறு பாக்டீரியாவை எதிர்க்கும் தன்மை உடையது. இது பருக்களை தடுக்கும். ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு ஏற்றது. முகத்திலுள்ள எண்ணெய் பசையை நீக்குகிறது. மூங்கில் சாறு பயன்படுத்துவதால் சருமம் வலுவாகவும் உறுதியாகவும் மாறும்.  தூசு, புகை போன்ற சுற்றுச்சூழல் மாசுபாடுகளின் இருந்து சருமத்தை பாதுகாக்கும். முகப்பருவால் ஏற்படும் சரும பாதிப்புகளை குறைக்கிறது. குறிப்பாக நமது தோலின் வெளிப்புற அடுக்கை மீண்டும் உருவாக்கும் திறன் உடையது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். 

சுத்தமான சருமம்!

சருமத்தில் உள்ள மாசுக்களை அகற்றுவதில் சிறப்பாக செயல்படுகிறது. வெளியில் சென்று வீடு திரும்பும்போது தூசி, அழுக்கு, மாசு என சருமம் பாழாகியிருக்கும். அப்போது மூங்கில் சாற்றுடன் தயாரான தோல் பராமரிப்புப் பொருளைப் பயன்படுத்தவும். 

புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்! 

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அமினோ அமிலங்கள், ஃபிளாவனாய்டுகள் மூங்கில் சாற்றில் மிகுந்து காணப்படுகின்றன. இதனால் புற ஊதா கதிர்களில் இருந்து சரும பாதுகாப்பு கிடைக்கும். மூங்கில் சாற்றுடன் கூடிய சன்ஸ்கிரீன்கள் பயன்படுத்தும்போது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து சருமம் பாதுகாக்கப்படும். மூங்கில் சாறு தோல் சுருக்கங்களை குறைக்கும். இதனால் இளமையான தோற்றம் கிடைக்கும். 

தோலுக்கு மட்டுமல்ல தலைமுடிக்கும் ஏற்றது! 

நீங்கள் பயன்படுத்தும் ஹேர் கண்டிஷனரில் மூங்கில் பொடியை கலக்கலாம். இது தலைமுடியை வலுவாகவும், மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும் திறன் கொண்டது. தலைமுடியை வேரில் இருந்து வலுப்படுத்த விரும்பினால்,  எண்ணெயில் சிறிதளவு மூங்கில்  சாற்றை சேர்க்கலாம்.

click me!