பொடுகு என்பது மிகவும் பொதுவான பிரச்சனை. ஆனால் இந்த பிரச்சனையை நீங்கள் சரியான நேரத்தில் தீர்க்கவில்லை என்றால், அது உங்கள் முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும். பொடுகு முடியின் ஆரோக்கியத்தை மட்டும் பாதிக்காது, முகம் மற்றும் வெளிப்புற தோள்களிலும் பல்வேறு பிரச்னை உருவாக காரணமாகிவிடுகின்றன. முகத்தில் பரு மற்றும் அரிப்பு போன்ற பிரச்னைகளும் அதிகரித்துவிடும். பொடுகுக்கான காரணங்களும் நபருக்கு நபர் மாறுபடும். முடியில் ஊட்டச்சத்து குறைபாடு தோலின் pH அளவு சரிவு, உடலில் நீர் பற்றாக்குறை, ரசாயன பொருட்களின் அதிகப்படியான பயன்பாடு, உச்சந்தலையை சுத்தமாக வைக்காமல் இருப்பது போன்றவை பொடுகு ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுக்கின்றனர். எனினும் பொடுகை போக்க வீட்டு வைத்தியங்கள் கைமேல் பலன் தருகின்றன.
எலுமிச்சம்பழம்
எலுமிச்சம்பழம் மற்றும் தேங்காய் எண்ணெய் பொடுகுத் தொல்லையைப் போக்குவதில் பயனுள்ளதாக இருக்கும். 2-3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் இந்த கலவையை பஞ்சு உருண்டையால் உச்சந்தலையில் தடவவும். இதனால் ஒருசில வாரங்களில் பொடுகுத் தொல்லை நீங்கிவிடும்.
வெந்தயம்
வெந்தயத்தில் புரதச்சத்து அதிகம். இது முடியை பலப்படுத்துகிறது மற்றும் பொடுகு வராமல் தடுக்கிறது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதனால் முடியின் வேர்கள் வலுவாக இருக்கும். முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவுகிறது. வெந்தயப் பொடியை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தடவவும். இந்த பேக் பொடுகை போக்க உதவுகிறது.
Condoms Facts : ஆணுறைகள்- அறிந்ததும்... அறியாததும்..!!
இலவங்க இலை
நான்கு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் ஒரு டீஸ்பூன் அரைத்த இலவங்க இலைகளை சேர்க்கவும். இந்த கலவையை சிறிது சூடாக்கிவிட்டு, ச்சந்தலையில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். ஒரு மணி நேரம் அப்படியே விட்டு, பின்னர் ஷாம்பூவைக் கொண்டு நன்றாகக் கழுவவும். இந்த பேக்கை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தடவி வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.