சருமத்தை காக்கும் சன்ஸ்கீரின்
சூரியனிலிருந்து வெளிவரும் சில கதிர்கள் நம் சருமத்திற்கு சேதத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் தோல் வறட்சி ஏற்பட்டு சுருக்கங்கள் அதிகமாகும். ஆகவே வெளியில் செல்லும்போது சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். வறண்ட சருமத்தினர் ஃபோம் டைப் சன்ஸ்கிரீன், மென்மையான சருமத்தினர் லோஷன் டைப் சன்ஸ்கிரீன், ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் ஜெல் டைப் சன்ஸ்கிரின் உபயோகிக்கலாம். தொடர்ந்து சரும பராமரிப்பில் கவனம் செலுத்தினால் சுருக்கங்கள் இல்லாத இளமையான தோற்றத்தினை பெறலாம்.