முகத்தின் காணப்படும் பருக்கள், கரும்புள்ளிகள் ஏற்பட சூரிய ஒளி நேரடியாக சருமத்தில் படுவது, மாத்திரைகள் எடுத்து கொள்ளுதல், ஹார்மோன் சமச்சீரின்மை ஆகியவைகளும் காரணமாக இருக்கலாம். கரும்புள்ளிகள் பருக்களை போல வலியை ஏற்படுத்தாது; ஆனால் முகத்தின் அழகையே சிதைத்துவிடுகிறது. நமது சருமத்தில் காணப்படும் மயிர்க்கால்களில் (Follicles) இறந்த செல்கள், எண்ணெய் ஆகியவை சேரும்போது குமிழ் போல உருவாகுகிறது. இது காற்றோடு வினைபுரியும்போது கரும்புள்ளிகளாக மாறுகிறது. இதை தடுக்க சில வழிகள் உள்ளன.