Eyebrow hair: புருவ முடி அடர்த்தியாக வளர அருமையான எளிய டிப்ஸ் இதோ உங்களுக்காக!

First Published Jan 3, 2023, 6:38 PM IST

ஒரு சில இயற்கையான பொருட்களை கொண்டே புருவ முடியை அடர்த்தியாக வளர வைக்க முடியும். அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

நம்மில் சிலருக்கு கண் புருவம் மிகவும் மெல்லியதாக இருக்கும். முகத்திற்கு அழகு சேர்க்கும் புருவம் அடர்த்தியாக மற்றும் கருமையாக இருக்க வேண்டும் என பலரும் விரும்புவார்கள். ஆனால், எல்லோருக்கும் அப்படி அமைவதில்லை. சிலருக்கு இரு புருவங்களும் அடர்த்தியாக ஒன்றுடன் ஒன்று இணைந்தது போல இருக்கும். ஆனால், சிலருக்கோ மெல்லிய கோடு போல் புருவங்கள் இருக்கும். இதனால், அவர்கள் மிகுந்த கவலை அடைவது உண்டு. இருப்பினும் இனி கவலை கொள்ள தேவையில்லை. ஏனெனில், ஒரு சில இயற்கையான பொருட்களை கொண்டே புருவ முடியை அடர்த்தியாக வளர வைக்க முடியும். அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயை பஞ்சில் தொட்டு, இரு புருவங்களிலும் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும். இதனை ஆறு வாரங்களுக்குத் தொடர்ந்து செய்து வர வேண்டும். புருவ வளர்ச்சியை ஊக்குவிப்பதில் விளக்கெண்ணெய்க்கு மிக முக்கிய பங்குண்டு.

கற்றாழை

இரு புருவங்களிலும் கற்றாழை ஜெல்லைத் தேய்த்து, 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இப்படிச் செய்வதால் விரைவில் புருவ முடி வளர்ந்து விடும்.

அடுப்பு இல்லாமல் ஒரு ரெசிபியை செய்யலாமா - "பேல் பூரி"!

வெந்தயம்

வெந்தய விதைகளை 1/2 டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த நாள் காலையில் ஊறவைத்த வெந்தயத்தை பேஸ்ட் போல அரைத்து, புருவ முடியில் தடவிக் கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் கழித்து, புருவங்களை கழுவி விட வேண்டும். வெந்தயத்தில் நிக்கோட்டினிக் ஆசிட் மற்றும் புரோட்டீன் இருப்பதன் காரணணத்தால், புருவ முடியை அடர்த்தியாக வளர வைக்க உதவி புரிகிறது. 

eye brow new

வெங்காயச் சாறு

வெங்காயச் சாற்றினை ஒரு பஞ்சில் நனைத்துக் கொள்ள வேண்டும். தினந்தோறும் தூங்குவதற்கு முன்பாக இரு புருவங்களிலும் இதனைத் தடவி வந்தால், புருவத்தில் முடி வளர்வதனை வெகு விரைவில் நம்மால் காண முடியும்.

பால்

பாலைப் பஞ்சால் தொட்டு இரு புருவங்களிலும் தேய்த்து, 15 நிமிடங்கள்  கழித்து கழுவ வேண்டும். 6 மாதங்களுக்கு இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் புருவ முடி சீராக வளரும்.

மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் மிக எளிதாக கிடைக்க கூடியது. அதோடு, இவையெல்லாம் நம்மைச் சுற்றியே உள்ளது. ஆகையால் இந்தப் பொருட்களைப் பயன்படுத்தி, உங்களின் புருவ முடியை அடர்த்தியாக வளர்த்துக் கொள்ளுங்கள்.
 

click me!