தக்காளி மற்றும் தேன்
தக்காளிச் சாறு மற்றும் தேன் மட்டும் கலந்து தடவி வந்தால் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பொலிவு பெறும். ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை ஒரு டீஸ்பூன் தக்காளி சாற்றில் சேர்த்து, அதை 15 நிமிடம் வரை முகத்தில் அப்ளை செய்யவும். பின்னர் அதை குளிர்ந்த நீரில் கழுவினால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் நீங்கிவிடும்.
தக்காளி மற்றும் எலுமிச்சை
தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறு கலவையில் சிறிது தேன் சேர்க்கவும். பின்னர் அதை உங்கள் முகத்தில் தடவவும். சில நிமிடங்களுக்குப் பிறகு அதைக் கழுவவும். இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள எண்ணெய் நீங்கி முகம் பொலிவு பெறும்