'சரும நிறத்தை இழக்கிறேன்'புது நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை உருக்கம் இந்த அறிகுறிகள் தான் காரணமா?

First Published | Jan 17, 2023, 5:28 PM IST

Mamta Mohandas Vitiligo Symptoms Causes: பிரபல நடிகை மம்தா மோகன்தாஸுக்கு ஏற்பட்டுள்ள விட்டிலிகோ எனும் வெண்படை நோய் சருமத்தில் நிற இழப்பை ஏற்படுத்தும். இதன் அறிகுறிகள், பாதிப்பு குறித்து இக்கட்டுரையில் காணலாம். 

mamta mohandas

புற்றுநோயால் அவதிப்பட்டு மீண்டு வந்த நடிகை மம்தா மோகன்தாஸ், அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விட்டிலிகோ எனும் வெண்படை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பகிர்ந்து கொண்டார். சருமம் அதனுடைய நிறம் இழந்து போகும் வகையான நோயை தான் விட்டிலிகோ என்கின்றனர். இந்த நோய் தாக்கினால் உடலின் வெவ்வேறு பகுதிகளில் நிறமிழப்பு ஏற்படும். இந்த நோய் வந்தால் வாய், ஸ்கால்ப், கண் இமைகள்/ புருங்கள் ஆகிய இடங்களில் பலருக்கு நிற இழப்பு உண்டாகும். 

mamta mohandas

வெண்படை மாதிரியான சரும பிரச்சனையால் அவதிபடுபவர்களுக்கு, நோயை விட பிறரின் புறக்கணிப்பு தான் அதிக வேதனையை உண்டாக்கும். இதனாலேயே பலர் இந்த நோயை குறித்து பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். இந்த நோயின் தவறான புரிதல்களே இந்த குழப்பங்களுக்கு காரணம். ஆனால் திரை பிரபலமாக இருக்கும் நடிகை மம்தா, தைரியமாக இதனை கூறியுள்ளார். இந்த நோய் குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம். 

Tap to resize

வெண்படை நோய்: ஒரு விளக்கம்! 

வெண்படை நோய் வந்தவர்களுக்கு சருமம் நிறம் இழக்கத் தொடங்கும். நாளடைவில் இந்த நிறமிழப்பு பெரியதாக மாறும். இந்த நிலை உடலின் எந்த இடத்திலும் உருவாகலாம். நமது உடலில் முடி, தோலின் நிறம் மெலனின் நிறமியால் தான் ஏற்படுகிறது. இந்த நிறமியின் செல்கள் இறந்தாலோ அல்லது அதனுடைய இயக்கம் தடைபட்டாலோ வெண்படை நோய் உருவாகிறது. யாருக்கு வேண்டுமானாலும் இந்த நோய் தாக்கலாம். மரபணு மாற்றம், பரம்பரை வியாதியாக கூட இது வரலாம். தைராய்டு பிரச்சனை, சர்க்கரை வியாதி, வைட்டமின் பி12 பற்றாக்குறையினால் ஏற்படும் இரத்த சோகையோடு இந்த நோய் பாதிப்பு வரலாம். 

இதையும் படிங்க: Green tea vs Coffee: கிரீன் டீயா? காபியா? எது சிறந்ததுனு தெரியாம குடிக்காதீங்க! இதயத்திற்கு ஆபத்து வரும்...

வெண்படை நோயாளிகளோடு பழகலாமா? 

வெண்படை பரவும் வகையிலான தொற்று வியாதி கிடையாது. இந்த நோய் வந்தவர்களோடு பழகுவதாலோ, அவர்களின் பொருளை உபயோகம் செய்தாலோ வெண்படை வராது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களை திருமணம் செய்வதாலும் வெண்படை நோய் உங்களுக்கு வராது. 

இதையும் படிங்க: Papaya aval kesari: உடலுக்கு சக்தி தரும் ருசியான 'பப்பாளி அவல் கேசரி' ஈஸியா எப்படி செய்வது?

Mamta Mohandas

வெண்படை குணமாகுமா? 

வெண்படை நோய் வந்த சில நாட்களிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்தால் குணமாகும் வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்தில் கண்டறிந்தால் பாதிப்பை கட்டுப்படுத்தலாம். உங்களுடைய தோலில் வெண்புள்ளிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசியுங்கள். 

Latest Videos

click me!