Migraine Headache: அடிக்கடி ஒற்றை தலைவலி வருதா? இந்த உணவுகளை முதலில் நிறுத்துங்கள்.!

Published : Jul 20, 2025, 12:21 PM IST

ஒற்றைத் தலைவலியை தூண்டக்கூடிய உணவுகள் குறித்தும், அதன் பின்னால் உள்ள மருத்துவ காரணங்கள் குறித்தும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
16
ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும் உணவுகள்

பலருக்கும் ஒரு பக்கம் தலைவலி ஏற்படுவது சகஜம்தான். ஆனால் இது பொதுவான தலைவலியைக் காட்டிலும் மிக மோசமானவை. ஒற்றைத் தலைவலி என்பது தலையின் ஒரு பக்கத்தை கடுமையாக பாதிக்கும். தலைவலி மட்டுமல்லாமல் குமட்டல், வாந்தி, ஒளி மற்றும் ஒலிக்கு அதிக உணர்திறன் ஆகிய பிரச்சனைகளும் ஏற்படலாம். ஒற்றைத் தலைவலிக்கு ஹார்மோன் மாற்றங்கள், சுற்றுச்சூழல் காரணிகள், தூக்கமின்மை ஆகியவற்றுடன் சில உணவுகளும் காரணமாக அமையலாம். ஒற்றைத் தலைவலி என்பது பல தூண்டுதல்களால் ஏற்படக்கூடிய சிக்கலான நரம்பியல் நிகழ்வுகள் ஆகும். சில உணவுகளில் இருக்கும் டைரமைன் நைட்ரேட்டுகள் ஹிஸ்டமைன்கள், காஃபின் ஆகியவை ஒற்றைத் தலைவலியை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

26
சீஸ் அல்லது புளிப்பு நிறைந்த உணவுகள்

நீண்ட காலம் பாதுகாக்கப்படும் சீஸ் அல்லது புளிப்பு நிறைந்த உணவுகளில் டைரமைன் என்ற வேதிப்பொருள் நிறைந்துள்ளது. இது ரத்த நாளங்கள் மற்றும் நரம்பியல் டிரான்ஸ்மிட்டர்களை சீர்குலைத்து ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கலாம். செடார், பார்மசான், ப்ளூ சீஸ் போன்ற நீண்ட காலம் பாதுகாக்கப்படும் சீஸ் வகைகளில் இந்த டைரமின் நிறைந்துள்ளது. சில ஆய்வு முடிவுகளின் படி இந்த உணவுகள் ஒற்றைத் தலைவலியை தூண்டுவதில் முக்கிய பங்காற்றுவது கண்டறியப்பட்டுள்ளது. சிலருக்கு தயிர், மோர் கூட ஒற்றைத் தலைவலியை தூண்டலாம். எனவே நீண்ட காலம் பாதுகாக்கப்படும் அல்லது புளித்த உணவுப் பொருட்களை உட்கொள்வதை கட்டுப்படுத்த வேண்டும். புதிய பால், தயிர் மட்டுமே சாப்பிட வேண்டும். பார்மசான், செடார் சீஸ்களுக்கு பதிலாக ரிகோட்டா அல்லது மொஸரெல்லா சீஸ்களை எடுத்துக் கொள்ளலாம்.

36
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளான பேக்கன், டெலி மீட்ஸ், ஹாட் டாக்ஸ் போன்ற இறைச்சிகளில் நைட்ரேட்டுகள் நைட்ரைட்கள் மற்றும் டைரமைன் ஆகியவை நிறைந்துள்ளன. இவை ஒற்றைத் தலைவலியை தூண்டும் வாஸ்குலர் மாற்றங்களுடன் தொடர்புடையவை. ஆராய்ச்சியின் படி பதபடுத்தப்பட்ட இறைச்சிகளை அடிக்கடி உட்கொள்வது ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளது. இந்த வகை இறைச்சிகளில் காணப்படும் நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்கள் ரத்தநாளங்களை விரிவடைய செய்வதன் மூலமாக தலைவலியை தூண்டுகின்றன. ஒற்றைத் தலைவலியில் இருந்து தப்பிக்க நினைப்பவர்கள் புதிய இறைச்சிகளை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். ஒருவேளை பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை வாங்கும் பொழுது நைட்ரேட்டுகள் நைட்ரேட்டுகள் இருக்கிறதா என்பதை லேபில்களை படித்து பார்த்து வாங்க வேண்டும்.

46
ரெட் ஒயின்

மது அருந்துபவர்களுக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சினை சகஜமாக இருக்கிறது. இதற்கு காரணம் மது மற்றும் ரெட் ஒயினில் ஹிஸ்டமைன்கள், டைரமைன், சல்பைடுகள் மற்றும் டானின்கள் நிறைந்துள்ளன. இவை ரத்தநாளங்களை விரிவுபடுத்தி வீக்கம் அல்லது நரம்பியல் விளைவுகளை தூண்டுகிறது. 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி ஒற்றைத் தலைவலியை கொண்ட பங்கேற்பாளர்களில் 35 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் மது குடிப்பவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அதில் 77 சதவீதத்தினர் ரெட் ஒயின் குடிப்பவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. ஆல்கஹால் நீரிழிப்பையும் ஏற்படுத்தி தலைவலியை இன்னும் மோசமாக்கலாம். இதற்கு தீர்வாக மது அருந்துதலை குறைக்க வேண்டும். குறிப்பாக ஹிஸ்டமைன்கள் நிறைந்த ரெட் ஒயின் போன்றவற்றை முற்றிலுமாக கைவிடுதல் வேண்டும்.

56
காஃபின் நிறைந்த உணவுகள்

காபி, தேநீர், சாக்லேட் மற்றும் சில குளிர்பானங்களில் காஃபின் நிறைந்துள்ளது. காஃபின் ஒற்றைத் தலைவலியை போக்க உதவும் என்றாலும், அதிகப்படியான காஃபின் உட்கொள்ளல் அல்லது திடீரென காஃபினை நிறுத்துவது ஆகியவை ஒற்றைத் தலைவலியை தூண்டலாம். சாக்லேட்டில் உள்ள காஃபின் மற்றும் தியோப்ரோமின் போன்ற சில பொருட்கள் சிலருக்கு தலைவலியை தூண்டலாம். சீன உணவுகள் மற்றும் சில சூப்களில் பயன்படுத்தப்படும் சுவையூட்டியான மோனோசோடியம் குளூட்டமேட் தலைவலியை தூண்டுவதாக கண்டறியப்பட்டுள்ளது. டயட் பானங்கள் மற்றும் சர்க்கரை உணவுகளில் காணப்படும் அஸ்பார்டேம் என்கிற செயற்கை இனிப்பூட்டியும் சிலருக்கு தலைவலியை ஏற்படுத்துகிறது. தக்காளி, அத்திப்பழம், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள் சிலருக்கு ஒற்றை தலைவலியை தூண்டலாம். ஊறுகாய் போன்றவற்றில் அதிக டைரமைன் இருப்பதால் ஊறுகாய் சாப்பிடுபவர்களுக்கும் தலைவலி ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

66
ஒற்றைத் தலைவலிக்கு சிகிச்சைகள் என்ன?

பொதுவாக ஒற்றைத் தலைவலிக்கு நீரிழப்பு ஒரு முக்கிய காரணமாகும். எனவே தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உணவை தவிர்ப்பது அல்லது அதிக பசி ஒற்றை தலைவலியை தூண்டலாம். எனவே வழக்கமான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்துவதை கண்டறிந்தால் அதை குறித்து வைத்துக்கொண்டு அந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இயன்றவரை பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து புதிய, இயற்கையான உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் சரியான மருத்துவரை அணுகி ஆலோசனை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மருத்துவர்கள் உங்களின் தனிப்பட்ட உடல்நலன் மற்றும் தலைவலிக்கான காரணங்களை கண்டறிந்து சரியான சிகிச்சை முறையை அளிப்பார்.

Read more Photos on
click me!

Recommended Stories