Is your pregnancy getting delayed? Consider these 5 things
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் தாய்மை என்பது சிறப்பு வாய்ந்தது. ஆனால் இந்த மகிழ்ச்சி அனைத்து பெண்களுக்கும் கிடைப்பதில்லை. சில காரணங்களால் கர்ப்பம் தரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். உடல் எடை அதிகமாக இருப்பது கர்ப்பம் அடைவதில் சிக்கல்களை ஏற்படுத்தும். அதிக எடை கொண்ட பெண்கள் கர்ப்பமடைய மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல் ஆண்கள் பருமனாக இருப்பதும் கருவுறுதல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே உடல் எடையை குறைப்பது என்பது முதல் தீர்வாகும்.
25
தைராய்டு ஹார்மோன்கள் மற்றும் மாதவிடாய் சுழற்சி
தைராய்டு ஹார்மோன்களில் T3 மற்றும் T4 இனப்பெருக்கத்துடன் தொடர்புடையவை. தைராய்டு ஹார்மோன் சமநிலையற்று இருந்தால் கருத்தரிப்பதில் பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த ஹார்மோன் சமநிலையின்மை கருச்சிதைவுகளுக்கு வழிவகுக்கும். எனவே தைராய்டு ஹார்மோன்களை சரி செய்வது அவசியம். கருவுறாமைக்கு மற்றொரு முக்கிய காரணம் மாதவிடாய் சுழற்சி. சரியான மாதவிடாய் சுழற்சி இருந்தால் கர்ப்பம் எளிதாகும். அதிகபட்ச மாதவிடாய் நாட்கள் 3 ஆகும். ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி அல்லது அதிக மாதவிடாய் நாட்கள். இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
35
PCOS மற்றும் விந்தணு பகுப்பாய்வு
PCOS என்பது சினைப்பை நீர்க்கட்டி ஆகும். இதனால் கருத்தரித்தலில் பிரச்சனை, மாதவிடாய் சுழற்சியில் சிக்கல்கள் ஏற்படலாம். சினைப்பையில் கட்டிகள் இருக்கும் பொழுது கருமுட்டை உருவாவதில் தாமதம் ஏற்படும். சரியான சிகிச்சை எடுப்பதன் மூலம் இதனை கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். கருத்தரிப்பதில் சிக்கல் இருந்தால் ஆண்களுக்கு விந்தணு பகுப்பாய்வு பரிந்துரைக்கப்படுகிறது. குறைந்த விந்தணு எண்ணிக்கை அல்லது விந்தணு செயலிழப்பு கருவுறாமைக்கு காரணமாகிறது. இந்த சோதனைகளை செய்து, குறைகளை கண்டறிந்து சரி செய்தால் கருவுறுதல் எளிதாகும்.
35 முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருந்து கர்ப்பத்தை திட்டமிட்டால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு இந்த பரிசோதனையை செய்து கொள்வது அவசியம். கர்ப்பம் தரிக்க முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். லேசானது முதல் மிதமான உடற்பயிற்சி செய்வதன் மூலம் மாதவிடாய் சுழற்சி ஒழுங்கமைக்கப்பட்டு ஆக்சிஜன் மற்றும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் கருவுறுதல் எளிதாகும்.
55
மருத்துவ ஆலோசனை தேவை
மேற்குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் பொதுவான தகவல்களின் அடிப்படையிலானது மட்டுமே. ஒவ்வொருவரின் உடல் நலனும் வேறுபடலாம். ஒவ்வொருவருக்கும் கர்ப்பம் தரிப்பதற்கான காரணங்களும் வேறுபடலாம். எனவே உங்களுக்கு கர்ப்பம் தள்ளிக்கொண்டே சென்றால் சரியான மருத்துவரை அணுகி முறையாக ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் பெற வேண்டியது அவசியம்.