Orithal Thamarai Choornam : புது மாப்பிளையா நீங்க? இல்ல திருமணம் பண்ணப் போறீங்களா? இந்த சூரணம் சாப்பிடுங்க

Published : Jul 13, 2025, 03:32 PM IST

சமீபத்தில் திருமணம் முடிந்த மற்றும் திருமண நிச்சயிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கு இல்லற வாழ்க்கை மேம்படுவதற்கு ஓரிதழ் தாமரை மூலிகை உதவும் என சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

PREV
16
Health Benefits of Orithazh Thamari Sooranam

தமிழகத்தில் கிடைக்கும் பிரபலமான மூலிகைகளில் ஒன்று ஓரிதழ் தாமரை. இது ஈரமான நிலங்கள், வயல் வரப்புகள் மற்றும் புல்வெளிகளில் வளரும் ஒரு மூலிகைச் செடியாகும். பெயருக்கு ஏற்றார் போல இது ஓரு இதழ்களை மட்டுமே கொண்டுள்ளது. சித்த மருத்துவம், ஆயுர்வேதம் மற்றும் இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஓரிதழ் தாமரைக்கு தனி இடம் உண்டு. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் ஆண்மையை பெருக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. ஓரிதழ் தாமரையின் இலை, தண்டு, பூ, வேர், காய் என அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் கொண்டு விளங்குகிறது. இந்த மூலிகை செடியின் மருத்துவ குணங்கள் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

26
ஆண்களுக்கு அருமருந்தாகும் ஓரிதழ் தாமரை

ஆண்மை பெருக்கி மற்றும் பாலியல் ஆரோக்கியம் என்பது ஓரிதழ் தாமரையின் மிக முக்கியமான மற்றும் பரவலாக அறியப்பட்ட மருத்துவ குணமாக அறியப்படுகிறது. இது ஆண்களுக்கு பாலியல் செயல் திறனை மேம்படுத்தவும், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், விந்துவின் தரத்தை உயர்த்தவும் பயன்படுகிறது. ஆயுர்வேதத்தில் ‘விருஷ்ய’ என ஓரிதழ் தாமரை குறிப்பிடப்படுகிறது. இதற்கு “இனப்பெருக்க மண்டலத்தை மேம்படுத்துதல்” என்பது பொருளாகும். சூரணம் என்பது பல மூலிகைகள் சேர்ந்த கலவையாகும். ஓரிதழ் தாமரை சூரணமும் பல மூலிகைகளின் கலவையால் தயாரிக்கப்படுகிறது. ஜாதிக்காய், ஜாதி பத்திரி, அதிமதுரம், செந் சந்தனம், சீரகம், ஓரிதழ் தாமரை, நாட்டு சர்க்கரை ஆகியவற்றை கொண்டு இந்த சூரணம் தயாரிக்கப்படுகிறது.

36
ஓரிதழ் தாமரை சூரணத்தை எப்படி சாப்பிட வேண்டும்?

ஓரிதழ் தாமரை சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அல்லது சித்த மருத்துவரிடம் ஆலோசித்து இந்த சூரணத்தை வாங்கிக் கொள்ளலாம். மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் இந்த சூரணத்தை எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக காலை மற்றும் இரவு என இரண்டு வேளை 2-4 கிராம் வரை இந்த சூரணத்தை சாப்பிட வேண்டும். உணவு உண்ட பின்னர் நெய் அல்லது பாலில் கலந்து இதை சாப்பிட வேண்டும். சித்த மருத்துவர் எஸ்.காமராஜ் வெளியிட்டுள்ள வீடியோவின் படி, இதை ஆண்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். குழந்தை பாக்கியம் கிடைக்கும் வரை இந்த சூரணத்தை ஆண்கள் சாப்பிட வேண்டும். இதை சாப்பிடுவதால் எந்த பக்க விளைவுகளும் கிடையாது. மேலும் இதில் பக்கவிளைவுகளும் அதிகமில்லை. இல்லற வாழ்க்கை சிறக்க எளிய மூலிகைகளில் ஓரிதழ் தாமரையும் ஒன்று என அவர் கூறியுள்ளார்.

46
ஓரிதழ் தாமரையில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்

ஆண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனைக்கு முக்கிய காரணங்களாக இருப்பது விந்தணுக்களின் வீரியம், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு, விந்தணுக்களின் தரத்தில் குறைபாடுகள் ஆகியவை காரணமாக அமைகின்றன. இதற்கு ஓரிதழ் தாமரை சிறந்த தீர்வு அளிக்கிறது. விந்துக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை இது நீக்குகிறது. பொதுவாக இது கசப்பு மற்றும் காரத்தன்மை கொண்டது. ஆயுர்வேதத்தில் இது ஸ்தலகமலா என்று அழைக்கப்படுகிறது. இது கருவுறாமை எதிர்ப்பு செயல்பாடு நிலையில் வேலை செய்வது ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஆண் எலிகளில் நடத்தப்பட்ட சோதனையில் மலட்டுத்தன்மையை மீட்டெடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் வலி நிவாரணி, மூட்டு வலி எதிர்ப்பு ஆகிய மருத்துவ குணங்களையும் இது கொண்டுள்ளது.

56
யாரெல்லாம் ஓரிதழ் தாமரை சூரணத்தை பயன்படுத்தலாம்?

மேலும் ஓரிதழ் தாமரை சூரணத்தில் சேர்க்கப்படும் ஜாதிக்காய் பாலுணர்வை தூண்டக்கூடிய ஊக்கியாக செயல்படுகிறது. இதில் இருக்கும் அடோப்டோஜென் பாலுணர்ச்சியை மேம்படுத்துகிறது. ஜாதி பத்திரி என்பது ஜாதிக்காயில் இருந்து எடுக்கப்படும் மெல்லிய பூ போன்ற ஒன்றாகும். இது நறுமணம் நிறைந்தது. ஜாதி பத்திரியும் விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்கவும், பாலியல் உறவில் ஆர்வத்தை தூண்டும் மூலிகையாக விளங்குகிறது. காய்ச்சலுக்கு பிறகு உடல் எடை குறைந்தவர்கள், நரம்பு தளர்ச்சி இருப்பவர்கள், வெள்ளைப்படுதல் பிரச்சனை இருப்பவர்கள் ஆகியவர்களும் ஓரிதழ் தாமரையை எடுத்துக் கொள்ளலாம். மேலும் இது சிறுநீர் பெருக்கியாக செயல்படுவதால் இதை தொடர்ந்து எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீர் எரிச்சல், சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் உள்ளிட்டவையும் தீர்கிறது.

66
மருத்துவ ஆலோசனை தேவை

ஓரிதழ் தாமரையானது பல மருத்துவ குணங்களைக் கொண்டிருந்தாலும் சிலருக்கு இது ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். எந்த ஒரு சிகிச்சையை தொடங்குவதற்கு முன்னர் ஒரு அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர் அல்லது ஆயுர்வேத மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். சுயமாக மருந்து உட்கொள்ளுதல் கூடாது. சரியான அளவு மற்றும் பயன்படுத்தும் முறை ஆகியவற்றை தெரிந்து கொண்டு பயன்படுத்துவது பாதுகாப்பு அளிக்கும். கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், ஏற்கனவே ஏதேனும் நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவ ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துதல் கூடாது. மேற்குறிப்பிட்டப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. இதன் துல்லியம், நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் பொறுப்பேற்காது.

Read more Photos on
click me!

Recommended Stories