ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பிறந்தது வரை அவளது உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். அவற்றில் ஒன்று மிக முக்கியமான ஒன்று தான் உடல் பருமன். கர்ப்பத்திற்கு பிறகு எடை அதிகரிப்பது என்பது பொதுவாக விஷயம். ஆனால் அதுகுறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், எடையை சுலபமாக குறைப்பதற்கான பயனுள்ள சில சிம்பிள் டிப்ஸ்கள் பற்றி இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
26
ஆரோக்கியமான உணவு
ஒரு குழந்தையை பெற்ற பெண் ஆரோக்கியமாக இருக்க கூடுதல் ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம். அதைப் பூர்த்தி செய்ய ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட கொடுக்க வேண்டும். குறிப்பாக நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகள் எடை இழப்புக்கு பெரிதும் உதவும்.
36
தாய்ப்பால் கொடுக்கலாம் :
பிரசவத்திற்கு பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, தாயின் ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நல்லது. குறிப்பாக தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாயின் எடை குறையும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர். ஆமாங்க, தாய்ப்பால் கொடுப்பது தாயின் கொழுப்பை விரைவாக குறைக்க உதவுகிறது.
பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்கவும், ஆரோக்கியமாகவும் இருக்கவும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் எடை கணிச்சமாக குறையும். ஆனாலும் நீங்கள் உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன்பு ஒரு நிபுணரை அணுகுவது நல்லது.
56
நல்ல தூக்கம் :
தூக்கமின்மை ஜடையை அதிகரிக்க செய்யும். எனவே பிரசவத்திற்கு பிறகு போதுமான அளவு தூங்குங்கள். ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்குவதே வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
66
ஆரோக்கியமற்ற உணவுகள் :
பிரசவத்திற்கு பிறகு நீங்கள் ஆரோக்கியமற்ற உணவுகளிலிருந்து விலகியிருங்கள். வறுத்த, பொரித்த உணவுகள், குளிர் பானங்கள், இனிப்புகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது.
குறிப்பு : எடை அதிகரிப்பது என்பது ஒரு பொதுவான நிகழ்வு என்பதால் அது குறித்து நீங்கள் ஒருபோதும் கவலைப்பட வேண்டாம். உடல் எடையை குறைக்க சரியான வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே போதும்.