Heart Health : 30 வயசுக்கு மேல இதை கவனிங்க; மருந்தே சாப்பிடாம இதய நோய் அபாயத்தைக் குறைக்க சிறந்த வழிகள்!

Published : Oct 04, 2025, 09:12 AM IST

மருந்து எதுவும் எடுத்துக் கொள்ளாமல் இதய நோய் அபாயத்தைக் குறைக்க சிறந்த வழிகளை இங்கு காணலாம்.

PREV
15

2021-2023 ஆம் ஆண்டில் செய்த மாதிரி பதிவுமுறை (SRS) புள்ளிவிவரத்தில், மொத்த உயிரிழப்புகளில் சுமார் 31% இதய நோய்கள் தான் காரணமாக இருந்தது தெரியவந்தது. இதற்கு அமர்ந்த முறை, மன அழுத்தம், மோசமான உணவுப் பழக்கம் ஆகியவை தான் காரணம். தினசரி பழக்கவழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்தால் இதயப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும்.

25

உணவுப் பழக்கம்

உப்பை குறைவாக சேருங்கள். முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், புரதங்கள், நல்ல கொழுப்புகள் நிறைந்த உணவை சாப்பிடுங்கள். கீரை, நட்ஸ் உண்ணலாம். ஆக்ஸிஜனேற்றிகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள ஆலிவ் எண்ணெய், நட்ஸ், பருப்பு வகைகள், மீன் ஆகியவை உண்ணுங்கள். இவை இரத்த நாள வீக்கம் ஏற்படாமல் தடுக்கும்.

35

தினசரி உடற்பயிற்சி இதய தசைகளை வலிமையாக்கும். இரத்த ஓட்டத்தை சீராக்க உதவும். எடையைக் கட்டுக்குள் வைப்பதால் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும். லிஃப்டை பயன்படுத்தாமல் படிக்கட்டுகளில் செல்லலாம். அருகில் உள்ள இடங்களுக்கு வாகனத்தில் செல்லாமல் நடக்கலாம். அலுவலகத்தில் பணியாற்றினால் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் எழுந்து 5 நிமிடங்கள் நடந்துவிட்டு அமருங்கள். வாரத்தில் 3 முதல் 4 நாட்கள் வலிமை பயிற்சி, யோகா, ஏரோபிக்ஸ் செய்யலாம்.

45

புகையிலை, மது இதய நோயை அதிகரிக்கும் காரணிகளில் ஒன்றாகும். குடிப்பழக்கம் உயர் இரத்த அழுத்தம், ஒழுங்கற்ற இதய தாளங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தும். நாள்பட்ட மன அழுத்தம் இருந்தால் இதய நோய் வர வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க தியானம், யோகா, ஆழ்ந்த சுவாசம் ஆகியவற்றை செய்யலாம். மது, புகைப்பிடித்தல் பழக்கத்தை படிப்படியாக குறைக்கலாம்.

55

இதய ஆரோக்கியம் நன்றாக இருக்க தினமும் 7 முதல் 9 மணிநேரம் நன்றாக தூங்க வேண்டும். தூக்கமின்மை எடை அதிகரிப்பு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தலாம். துரித உணவுகள், பொரித்த உணவுகள், அதிகமான டிரான்ஸ் கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், சர்க்கரைகள், அதிக உப்பு சேர்த்த உணவுகள் இதய நோய்க்கு காரணமாகின்றன. உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், தமனிகளில் அடைப்பு ஏற்பட வாய்ப்பாக அமையும். இதையெல்லாம் தவிர்ப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

Read more Photos on
click me!

Recommended Stories