இனிப்பு பிரியர்களே உஷார்.! ரசகுல்லா சாப்பிட்ட சில நிமிடங்களில் இளைஞருக்கு நேர்ந்த கதி.! மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி காரணங்கள்.!

Published : Apr 22, 2026, 03:55 PM IST

A Man Suffered Sudden Paralysis After Eating Rasgullas : அளவுக்கு அதிகமாக ரசகுல்லா சாப்பிட்ட இளைஞர் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பின்னால் உள்ள அதிர்ச்சி காரணங்கள் என்ன என்பது பற்றி மருத்துவர் அளித்த விளக்கங்களை பார்க்கலாம்.

PREV
18
ரசகுல்லா சாப்பிட்ட இளைஞருக்கு ஏற்பட்ட சோகம்

ஹைதராபாத்தைச் சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர், அதிகப்படியான இனிப்புகள் சாப்பிட்ட பின்னர் கை, கால்கள் செயல்பட முடியாமல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரதி உடல் திடீரென பாரலைஸ் ஆகி இருப்பதை கண்டுபிடித்தனர். அவருக்கு எப்படி முடக்குவாதம் ஏற்பட்டது என்று அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார் விரிவான விளக்கத்தை அளித்திருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

28
அளவுக்கு அதிகமாக ரசகுல்லா சாப்பிட்ட இளைஞர்

ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஐந்து முதல் ஆறு ரசகுல்லாக்களை சாப்பிட்டு இருக்கிறார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவரது உடல் திடீரென முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு கைகளும், கால்களும் பலவீனம் அடைந்து நகர முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த ஆறு மாதங்களில் இவருக்கு அது போல மூன்று முறை ஏற்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இப்படி நடக்கும் பொழுது சிறிது நேரம் படுக்கையில் முடங்கும் அவர், பின்னர் தானாகவே குணமடைந்திருக்கிறார்.

38
ஹைபோகலிமிக் பீரியாடிக் பாராலிசிஸ்

அதேபோல் தற்போது ரசகுல்லா சாப்பிட்ட பின்னர் அவருக்கு மீண்டும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. அவர் சாப்பிட்ட இனிப்புகள் கெட்டுப் போகவில்லை. இது உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அல்ல. அவருக்கு பேச்சுத்திறன், பார்வை திறன் அல்லது சிறுநீர் கட்டுப்பாட்டில் எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும் உடல் பலவீனம் அடைந்திருந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு ‘ஹைபோகலிமிக் பீரியாடிக் பாராலிசிஸ்’ என்னும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கான காரணத்தை ஆராய்ந்த போது அது அதிர்ச்சிகரமாக இருந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

48
ரத்தத்தில் குறைந்த பொட்டாசியத்தின் அளவு

மருத்துவர்கள் கூறியதாவது, ரசகுல்லா போன்ற கார்போஹைட்ரேட் மற்றும் இனிப்புகள் கொண்ட உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்ணும் பொழுது உடலில் இன்சுலின் அளவு திடீரென உயர்கிறது. இந்த இன்சுலின் உயர்வு ரத்தத்தில் உள்ள பொட்டாசியத்தை செல்களுக்குள் தள்ளுகிறது. இதன் காரணமாக ரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு வேகமாக குறைகிறது. தசை இயக்கத்திற்கு தேவையான பொட்டாசியம் ரத்தத்தில் குறையும் பொழுது உடல் மற்றும் தசைகள் வேலை செய்ய இயலாமல் முடங்கி விடுகிறது.

58
ஹைப்பர் தைராய்டிசம்

அந்த இளைஞரின் ரத்தத்தை பரிசோதித்த போது பொட்டாசியம் அளவு 2.8 mEq/L ஆக மிக குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. இது சாதாரண அளவைவிட மிகக் குறைவாகும். உடனடியாக அவருக்கு பொட்டாசியம் சத்து அளிக்கப்பட்டது. இதனால் தற்போது உடல்நிலை சீராக உள்ளது. மேற்கொண்டு அந்த இளைஞரை பரிசோதித்த போது அவருக்கு ஹைப்பர் தைராய்டிசம் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த இளைஞரை மருத்துவர்கள் மேலும் சோதனைக்கு உட்படுத்திய போது அவருக்கு இதயத்துடிப்பு அதிகமாகவும், கண்கள் மற்றும் கழுத்தில் வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டது.

68
ஆசிய இளைஞர்களிடன் அதிகரிக்கும் பிரச்சனை

அவருக்கு தைராய்டு பரிசோதனை மேற்கொண்ட போது அதிகப்படியான தைராய்டு சுரப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை ஆங்கிலத்தில் தைரோடாக்சிக் ஹைபோகலிமிக் பீரியாடிக் பாராலிசிஸ் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். தமிழில் தைராக்ஸின் மிகையால் ஏற்படும் பொட்டாசியம் குறைவு சார்ந்த பக்கவாதம் என்று அழைக்கப்படுகிறது. இது ஆசியாவில் உள்ள இளைஞர்களிடம் அதிகம் ஏற்படக்கூடிய நோயாக இருந்து வருகிறது.

78
வேறு இளைஞருக்கும் இதே பாதிப்பு

இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு ரவி என்ற 33 வயது இளைஞர் ஒருவர் திருமண வீட்டில் ஜிலேபி மற்றும் ராப்ரி சாப்பிட்ட பிறகு பக்கவாதம் ஏற்பட்டு முடங்கி இருக்கிறார். இது சாதாரண உடல்நலக் குறைவு என்று அவர் தவிர்த்து வந்துள்ளார். பின்னர் மருத்துவரின் ஆலோசனைப்படி இனிப்பு சாப்பிட்ட பிறகு அவரை பரிசோதித்த போது அவர் பொட்டாசியம் அளவு குறைவு ஏற்பட்டதும், ஹைப்பர் தைராய்டிசம் இருப்பதும் கண்டறியப்பட்டது.

88
அலட்சியம் காட்டக்கூடாது - மருத்துவர்கள் எச்சரிக்கை

இதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இனிப்புகள் சாப்பிட்ட பிறகு அல்லது அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உட்கொண்ட பின்னர் திடீரென உடல் பலவீனமாக உணர்ந்தாலோ, கை கால்களை அசைக்க முடியாத நிலை ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுகி பொட்டாசியம் அளவை பரிசோதிக்க வேண்டும். தைராய்டு இருப்பவர்கள் அதற்கான முறையான சிகிச்சை எடுக்க வேண்டும். மாத்திரை மருந்துகளை ஒழுங்காக எடுத்துக் கொள்வதன் மூலமும், அடிக்கடி உடலை பரிசோதித்துக் கொள்வதன் மூலமும் நிரந்தரமாக பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories