
பக்கவாதம் என்பது திடீரென வரக்கூடிய ஒரு நாள்பட்ட நோயாகும். தீவிர பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிரந்தரமாக படுத்த படுக்கையாக கூட மாறிவிடுவர். அந்த அளவிற்கு அது ஒரு கொடிய நோயாகும். பக்கவாதம் ஒருவருக்கு ஏற்படுவதற்கு முன்னரே உடல் சிறு அறிகுறிகளை காட்டத் தொடங்கும். இதை புறக்கணிக்காமல் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் பக்கவாதம் வராமல் நம்மால் தடுத்து விட முடியும். பக்கவாதம் வரப்போகிறது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பலருக்கும் மயக்கம் அல்லது தலைச்சுற்றல் என்பது பொதுவாக காணப்படும் அறிகுறியாகும் சரியாக சாப்பிடாதவர்கள் வெயிலில் அதிக நேரம் அலைபவர்கள் சரியாக தண்ணீர் அருந்தாதவர்கள் தூக்கத்திலிருந்து திடீரென விழிப்பவர்களுக்கு மயக்கம், திடீரென சமநிலை இழந்து தடுமாறுதல் நடப்பதில் சிரமம் அல்லது தலைசுற்றல் ஏற்படம். ஆனால் அமெரிக்க ஷோரூம் அசோசியேஷன் அறிக்கையின்படி திடீரென தலை சுற்றுவது குறிப்பாக நம் அறையை சுற்றுவது போல் இருப்பது நம்மால் சமநிலையில் இருக்க முடியாதபடி தலை சுற்றுவது ஆகியவை பக்கவாதம் வருவதற்கான அறிகுறிகள் எனவே தலைசுற்றல் அல்லது மயக்கம் இருப்பவர்கள் அந்த அறிகுறிகளை புறக்கணிக்க கூடாது.
தலைவலி என்பது தற்போது பொதுவாக அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனையாகும். அதிக நேரம் மொபைல் போன்களை பார்த்தல், தொலைக்காட்சி பார்த்தல், கம்ப்யூட்டர் முன்பு நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்கள், மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி, சைனஸ் ஆகியவை தலைவலிக்கான காரணங்கள். ஆனால் அளவுக்கு அதிகமாக தலை வலிப்பது என்பது பக்கவாதத்திற்கான அறிகுறிகள் ஆகும் இதற்கு காரணம் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு தான் ஆக்ஸிஜன் வேகம் தடைபடுவதால் அதிக தலைவலி ஏற்படலாம் மூளை உங்களிடம் உதவி கேட்டு காட்டும் அறிகுறிதான் தலைவலி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அதிக வேலை செய்பவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் தூக்கமின்மை, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் போவது, வழக்கத்திற்கு மாறான அதிக சோர்வு ஆகியவை பக்கவாதத்திற்கான அறிகுறிகள் ஆகும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அறிகுறிகளை பொதுவான காரணங்களாக கூறுவது உண்டு. மீண்டு வர முடியாதபடி சோர்வாக உணர்ந்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். சிறு வேலையைக் கூட செய்ய உடம்பில் தெம்பில்லாமல் போவது பக்கவாதத்திற்கான அறிகுறியே. எனவே மிகவும் சோர்வாக உணர்ந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
உடலில் ஒரு பக்கம் மட்டும் மரத்துப் போனது போன்ற உணர்வு ஏற்பட்டால் அது பக்கவாதத்திற்கான அறிகுறியாகும். நீண்ட நேர தூக்கத்திற்கு பிறகு அல்லது நீண்ட நேரம் அமர்ந்திருந்த பிறகோ ஒரு பக்கம் மட்டும் மரத்துப்போனது போன்ற உணர்வை எதிர்கொள்கிறீர்கள் என்றால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். நரம்பியல் நிபுணர்களின் கருத்துக்கள் படி, மூளைக்கு இரத்த ஓட்டம் குறையும் பொழுது ஒரு பக்கம் மட்டும் மரத்து போகலாம். முகத்தின் ஒரு பக்கத்தில் உணர்வில்லாமல் இருப்பது, ஒரு பக்க கை, கால் தோள் பட்டை ஆகியவை மரத்துப்போவதாக உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது.
பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு காட்டும் முக்கிய அறிகுறி பார்வையில் ஏற்படும் குறைபாடுகள் தான். பார்வையில் தெளிவின்மை, மங்கலான பார்வை, ஒரு பொருளை பார்ப்பதில் சிரமம், பொருட்கள் இரண்டு இரண்டாக தெரிவது ஆகியவை பக்கவாதத்திற்கான அறிகுறிகள் ஆகும். மூளைக்கு சரியான இரத்த ஓட்டம் இல்லாததால் இது போல நிகழ்கிறது. கண் பார்வையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவது, பார்வை மங்குதல், ஒரு கண்ணில் மட்டும் ஏதாவது தொடர் பிரச்சனைகள் ஏற்படுவது ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
பக்கவாதம் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறிகளில் ஒன்று பேசுவதில் ஏற்படும் தடுமாற்றம்தான் வார்த்தைகளை மாறி மாறி பேசுதல் திடீரென பேசும் பொழுது நிறுத்துதல் பேச முடியாமல் தடுமாறுதல் வாய் குளறுதல் ஆகியவை பக்கவாதம் வருவதற்கான அறிகுறிகள் இதை மருத்துவத்தில் அஃபேசியா என அழைக்கப்படுகிறது புரிந்து கொள்வதில் தடுமாற்றம் திடீரென பேசுவதை நிறுத்துதல் ஆகியவை மூளைக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காததால் வரும் அறிகுறிகள் ஆகும் இது போன்ற அறிகுறிகளை அனுபவித்தால் அது பக்கவாதத்திற்கான அறிகுறிகள் என்பதை புரிந்து கொண்டு மருத்துவ உதவியை நாட வேண்டும்.