Split Hairs : தலைமுடிக்கு கீழ வெடிப்பு இருக்கா? ஒரே வாரத்தில் தடுக்க சூப்பர் டிப்ஸ்

Published : Jul 08, 2025, 02:37 PM IST

தலைமுடியின் கீழ் வெடிப்பு அதிகமாக இருந்தால் உங்களுக்கு உதவும் சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
16
முடி வெடிப்பை சரி செய்ய சிம்பிள் டிப்ஸ்!!

முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் இருந்தாலும் சிலரது அடி முடியில் மட்டும் வெடிப்பு ஏற்பட்டு ஒட்டுமொத்தம் முடியின் அழகையும் கெடுத்து விடுகிறது. முடியில் பிளவு ஏற்பட்டால் முடியின் வளர்ச்சியும் நின்றுவிடும். இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு என்னவென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை பின்பற்றுவதுதான். சரி இப்போது வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து, வெடித்திருக்கும் முடியை சரி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

26
பாதாம் எண்ணெய் :

பாதாம் எண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மெக்னீசியம், வைட்டமின் ஏ நிறைந்துள்ளன. இவை கூந்தலுக்கு . இந்த எண்ணெயை கூந்தலின் உச்சி முதல் நுனிவரை நன்கு தடவி வந்தால் வெடிப்புகள் நீங்கிவிடும். வாரத்திற்கு இரண்டு முறை இந்த எண்ணெயை தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு லேசான ஷாம்பு போட்டு குளித்தால் வெடிப்பு வருவே வராது.

36
வாழைப்பழம் :

வைட்டமின்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த வாழைப்பழமானது முடி செய்தமடைவதை தடுத்து முடியை வலிமையாக்கும். இதற்கு ஒரு வாழைப்பழத்தை மசித்து அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து முடியின் வேர் முதல் நுனி வரை தடவி சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு லேசான ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

46
ஆலிவ் ஆயில் :

ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு ஆலிவ் ஆயில் பெரிதும் உதவும். இந்த எண்ணெயில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சரும மற்றும் கூந்தலுக்கு ஊட்டச்சத்தை வழங்கி முடி வறண்டு போகாமலும், வெடிப்பு ஏற்படாமலும் தடுக்கும். இந்த எண்ணெயை வெடித்திருக்கும் முடியில் தடவி ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்துவிட்டு பிறகு மறுநாள் காலை லேசான ஷாம்பு போட்டு குடிக்க வேண்டும்.

56
கற்றாழை ஜெல் :

கற்றாழை ஜெல் முடி மற்றும் சரும சார்ந்த பிரச்சினைகளுக்கு ரொம்பவே நல்லது. இதில் இருக்கும் பண்புகள் முடியில் ஈரப்பதத்தை தக்க வைத்து, முடி வறண்டு போகாமலும், வெடிப்பு ஏற்படாமலும் தடுக்க உதவும். கற்றாழை ஜெல்லை உச்சி முதல் முடியின் நுனி வரை தடவி சிறிது நேரம் அப்படியே வைத்து விட பிறகு லேசான ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.

66
முடியில் வெடிப்பு வருவதை தடுக்க வழிகள் :

- குளோரின் கலந்த நீரில் குளிக்க கூடாது. இது முடி வளர்ச்சி மற்றும் வெடிப்பை ஏற்படுத்தும்.

- ஸ்ட்ரெயிட்னிங் செய்யும்போது முடி நன்கு காய்ந்திருக்க வேண்டும். ஈரமான கூந்தலில் செய்யும்போது முடி வெடிக்க வாய்ப்பு உள்ளது.

- அதிக சூட்டில் ஹேர் டிரையர் பயன்படுத்தக் கூடாது.

- தலைக்கு வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

- நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories