Cumin Water: சீரகத்தில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீரை குடிக்கும்போது, அதன் முழுமையான பலன்கள் உடலுக்குக் கிடைக்கும். குறிப்பாக கல்லீரலில் கொழுப்பு சேரும் நோயான ஃபேட்டி லிவர் வருவதற்கான வாய்ப்பை குறைக்க உதவுகின்றன.
சீரகத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீரைக் குடிப்பது உடலுக்கு பல்வேறு பலன்களைத் கொடுக்கிறது. இதில் உள்ள பயோ-ஆக்டிவ் சேர்மங்கள், ஃபேட்டி லிவர் நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.
28
வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்
டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையின் இரைப்பை மற்றும் கல்லீரல் மருத்துவ நிபுணர் டாக்டர். சஞ்சய் ஜெயின், சீரகத் தண்ணீர் செரிமானத்தை எளிதாக்கி, உடல் எடையைக் குறைக்க உதவுவதாகக் கூறுகிறார்.
38
இரைப்பை பிரச்சனைகளை குறைக்கும்
சீரகம், செரிமான நொதிகளின் செயல்பாட்டை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது குடல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. வயிறு உப்புசம், அஜீரணம் போன்ற இரைப்பை பிரச்சனைகளையும் இது குறைக்கும்.
'அன்னல்ஸ் ஆஃப் நியூட்ரிஷன் அண்ட் மெட்டபாலிசம்' இதழில் வெளியான ஆய்வு, சீரகத் தண்ணீர் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதாகக் கூறுகிறது. இது உடல் எடை, கொழுப்பு சேமிப்பு மற்றும் ஃபாஸ்டிங் இன்சுலின் அளவையும் குறைக்கும்.
58
கல்லீரலில் கொழுப்பு சேர்வதைக் குறைக்கும்
தினமும் 3 கிராம் சீரகத்தை 3 மாதங்களுக்கு சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கொழுப்பு குறைந்து, கொலஸ்ட்ரால் அளவு மேம்படும். மேலும், இடுப்பு சுற்றளவும் குறையும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. சீரகத் தண்ணீர் கல்லீரலில் கொழுப்பு படிவதையும் குறைக்கிறது.
68
நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது.
இது மெட்டபாலிசத்தை வேகப்படுத்தி, பசியைக் கட்டுப்படுத்துகிறது. சாப்பாட்டிற்கு முன் இதைக் குடிக்கும்போது, வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து, நீண்ட நேரம் பசிக்காமல் பார்த்துக்கொள்ளும். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும் இது உதவும்.
78
புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது
சீரகத் தண்ணீரில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பல வகையான புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும், புற்றுநோய் உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவும் 'மெட்டாஸ்டாசிஸ்' நிலையையும் தடுக்க உதவுகிறது.
88
சீரகத் தண்ணீரை குடித்தால் பக்க விளைவுகள் ஏற்படுமா
வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடிப்பது, உடலுக்குத் தேவையான நல்ல சேர்மங்களை எளிதில் உறிஞ்ச உதவும். ஆனால், இதை அளவோடு குடிக்க வேண்டும். ஏனெனில், அதிகமாகக் குடிக்கும்போது பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.