வயதானவர்களுக்கு மட்டுமே வந்த முழங்கால், மூட்டு வலி தற்போது 30 வயதிலேயே பலரையும் தாக்குகின்றது. நம்முடைய எடையை தாங்கும் ஒரு முக்கியமான பகுதி முழங்கால் தான். சில ஆய்வுகள் கூட முன்கூட்டியே முழங்கால் சேதமடைவதற்கான காரணத்தை கண்டறிந்துள்ளன. சரி இப்போது இளம் வயதிலேயே முழங்கால் வலி ஏன் ஏற்படுகின்றன என்றும், அதற்கான காரணங்கள் மற்றும் அதிலிருந்து நம்மை நாம் எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.
27
அதிகப்படியான உடல் எடை
அதிகப்படியான உடல் எடை காரணமாக முழங்கால் மற்றும் மூட்டுகளில் மீது அழுத்தம் ஏற்படுகிறது. அதாவது ஒவ்வொரு கிலோவும் கூட கூட முழங்கால் மீது ஏற்படும் அழுத்தமானது 4 மடங்கு அதிகமாகிறது. இதனால் முழங்கால்களுக்கிடையேயான குறுத்தலும்புகள் விரைவாக தேய்மானம் அடையும். எனவே இளம் வயதிலேயே உடல் பருமனாக இருந்தால் முழங்கால் சேதமடையும்.
37
அதிகப்படியான உடற்பயிற்சி
முறையான வழிகாட்டுதல் இல்லாமல் அதிகப்படியான உடற்பயிற்சி செய்தால் முழங்கால் சேதமடைவதற்கு வாய்ப்புகள் அதிகமுள்ளன. உதாரணமாக, முறையான வழிகொடுதல் மற்றும் சரியான பாதுகாப்பு இல்லாமல் ஓடுதல், அதிக எடையை தூக்குதல், ஜம்பிங் போன்ற உடற்பயிற்சிகள் செய்வது மூட்டுகளில் அதிகப்படியான அழுத்தம் மற்றும் காயத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக உடற்பயிற்சி செய்த பிறகு மூட்டுகள் மற்றும் தசைகளுக்கு போதுமான ஓய்வு கண்டிப்பாக கொடுக்க வேண்டும். ஆனால் போதிய ஓய்வு இல்லை என்றால் மூட்டுகளில் வீக்கம், காயங்கள் ஏற்படும். இது நீண்ட சேதத்தை ஏற்படுத்தும்.
57
உட்கார்ந்த வாழ்க்கை முறை
இந்த நவீன கால உட்கார்ந்த வாழ்க்கை முறையால் இளம் வயதிலேயே முழங்கால் சேதமடைகின்றன. அதாவது நாள் முழுவதும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் முழங்கால் தசை பலவீனமாகுவது மட்டுமல்லாமல், காயங்கள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும்.
67
ஊட்டச்சத்து இல்லாத உணவுகள்
நீங்கள் சாப்பிடும் உணவில் போதுமான அளவு வைட்டமின் டி, வைட்டமின் கே, கால்சியம், புரதம், மெக்னீசியம் போன்ற அத்தியாவாசிய ஊட்டச்சத்துக்கள் இல்லையென்றால் எலும்பு மற்றும் குறுக்கெலும்பு ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படும்.
77
தவறான காலணிகள்
நீங்கள் முறையற்ற காலணிகளை அணிந்தால் முழங்கால்கள் மற்றும் பாதங்களுக்கிடையே அழுத்தம் ஏற்படும். குறிப்பாக வாக்கிங் அல்லது ரன்னிங் செய்யும்போது மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.
மேலே சொன்ன விஷயங்களை நீங்கள் சரி செய்வதன் மூலம் 30 வயதிலேயே முழங்கால், மூட்டு வலி வருவதை தடுக்க முடியும்.