இங்கு டீயை விரும்பாதவர்கள் மிகவும் குறைவு. அதிலும் மழைக்காலம், குளிர்காலம் வந்தாலே பலர் அடிக்கடி டீ குடிக்கத் தொடங்கிவிடுவார்கள். இஞ்சி டீ என்றால் கூடுதல் பிரியம். அதற்காக அதிக ஆர்வம் காட்டுபவர்களும் உண்டு. இஞ்சி டீ, குளிர்கால சளித் தொந்தரவுக்கு, தொண்டை புண்ணுக்கு இதமாக இருக்கும். ஆனால் இந்த டீயை குடிப்பதால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அந்த வகையில் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இஞ்சி டீ குடிக்கலாமா? அவர்கள் குடிப்பதால் ஏதேனும் பிரச்சனைகள் வருமா? என்பதை இங்கு காணலாம்.
24
ஆய்வின் தகவல்
தேசிய மருத்துவ நூலகம் நடத்திய ஓர் ஆய்வில், இஞ்சி டீ ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது என முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த ஆய்வுக்காக 18 வயதுக்கு மேல் உள்ள 5 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு சோதனைகள் செய்யப்பட்டன. இதில் இஞ்சி டீ குடித்தவர்களிடம், டீ குடிக்காதவர்களிடமும் தரவுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் இஞ்சி டீ குடித்தவர்களுக்கு நல்ல ஆரோக்கிய பலன்கள் இருந்தனவாம்.
34
இரத்த அழுத்தம் குறையுமா?
இஞ்சி டீயை அருந்தாதவர்களுடன் ஒப்பிட்டால், இஞ்சி டீ குடித்தவர்களின் உயர் இரத்த அழுத்தம் கிட்டத்தட்ட 8.4 சதவீதம் குறைந்ததாக ஆய்வில் தெரியவந்தது. உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இஞ்சி டீ குடிக்கலாம். ஆனால் அதை அளவுக்கு மீறி எடுத்துக் கொள்ளக்கூடாது. இஞ்சி போட்ட டீயாகதான் என்றில்லாமல் ஏதேனும் ஒரு வழியில் சிறிய அளவில் இஞ்சி உண்பதால் உடலுக்கு நன்மை பயக்கும்.
இஞ்சி உண்பதால் செரிமானம் மேம்படுகிறது. இதில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் உடலை பாதுகாக்க உதவுகின்றன. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க இஞ்சி உதவுகிறது. மன அழுத்த ஹார்மோன்களை சமநிலையில் வைத்து மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால் இஞ்சியை குறைவாக அல்லது மருந்துவரால் பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டும் அதை அதிக அளவில் அல்ல, சிறிய அளவுகளில் உட்கொள்ள வேண்டும்.