Tea : பலவீனமா இருக்கீங்களா? இந்த டீ வகைகளை குடிச்சு பாருங்க..அசுர பலம் கிடைக்கும்.!

Published : Jul 18, 2025, 05:53 PM IST

காலநிலை குளிர்ச்சியாக மாறும் பொழுது பலரும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ஆரோக்கியமாக இருப்பதற்கும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சில டீ வகைகள் உதவுகின்றன. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

PREV
15
இஞ்சி டீ மற்றும் துளசி டீ

அனைவர் வீட்டிலும் இருக்கும் ஒரு பொருள் இஞ்சி. இதில் நோய் எதிர்ப்பு சக்தியுடன், அலர்ஜி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. இஞ்சியை துருவி கொதிக்கும் நீரில் சேர்த்து வடிகட்டி தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். துளசி ஆன்டி பாக்டீரியாக்கள், ஆன்டி வைரல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. கொதிக்கும் நீரில் சிறிதளவு துளசி இலைகளை சேர்த்து வடிகட்டி பனங்கற்கண்டு கலந்து குடித்து வர நுரையீரலில் தேங்கியிருக்கும் சளிகள் மற்றும் கழிவுகள் வெளியேறிவிடும்.

25
புதினா டீ மற்றும் மசாலா டீ

உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதில் புதினா முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் தலைவலி குறையவும், மார்பில் கட்டும் சளியை நீக்கவும் புதினா உதவுகிறது. கொதிக்கும் நீரில் டீ தூள் மற்றும் புதினா இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து குடிக்கலாம். மழைக்காலங்களுக்கு ஏற்ற மற்றொரு டீ வகை மசாலா டீ. ஏலக்காய், பட்டை, கிராம்பு, மிளகு ஆகியவற்றை சேர்த்து செய்த டீயை குடித்தால் சளி இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மழைக்காலங்களில் ஏற்படும் குடல் மந்தம் நீங்கி, செரிமானம் மேம்படும்.

35
லெமன் கிராஸ் டீ மற்றும் பிற டீ வகைகள்

லெமன் கிராஸ் டீயில் மன இறுக்கத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் இருக்கின்றன. லெமன் கிராஸ் இலைகளை கிள்ளிப்போட்டு பத்து நிமிடம் கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, தேன் சேர்த்து குடித்தால் சுவையான லெமன் கிராஸ் டீ ரெடி. இதேபோல் பிளாக் டீ, கிரீன் டீ, பெப்பர்மென்ட் டீ, அதிமதுரம் டீ, யூகலிப்டஸ் டீ, முல்லின் டீ போன்ற டீ வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இவை நுரையீரல் ஆரோக்கியத்தை காப்பதுடன், மழைக்காலங்களில் ஏற்படும் நோய்த்தொற்றுகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.

45
நட்சத்திர சோம்பு டீ

நட்சத்திர சோம்பு ஷிகிமிக் அமிலம் என்ற ஒரு கலவையைக் கொண்டுள்ளது, இது இன்ஃப்ளூயன்ஸா வைரஸை எதிர்த்துப் போராட உதவும் ஆன்டிவைரல் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இது வைரஸ் எதிர்ப்பு பண்புகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. ஒரு கப் சுடுநீரில் 1-2 நட்சத்திர சோம்பு களைப் போட்டு 10-15 நிமிடங்கள் கொதிக்க விட்டால் நட்சத்திர சோம்பு டீ ரெடி.

55
ரோஸ் ஹிப் டீ

ரோஸ் ஹிப் (ரோஜா செடியின் பழம்) வைட்டமின் சி சத்தின் சிறந்த ஆதாரமாகும். வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு அத்தியாவசியமானது. இந்த டீயானது வைட்டமின் சி சத்தை வழங்குதல், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துதல், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. உலர்ந்த ரோஸ் ஹிப்ஸை சுடுநீரில் போட்டு 10-15 நிமிடங்கள் ஊறவைத்து குடிக்கலாம்.

குறிப்பு: இந்த டீ வகைகளை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலம், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் மேம்படுத்தி, ஆரோக்கியமாக வாழலாம். இந்த டீ வகைகள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். ஏதேனும் தீவிர நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.

Read more Photos on
click me!

Recommended Stories