அட! இரவில் வெறும் 10 நிமிட 'வாக்கிங்'..  இத்தனை நோய்களை விரட்டுமா? 

Published : Feb 21, 2025, 08:15 AM IST

Night Walking Benefits : இரவில் நடைபயிற்சி செய்வது உடலுக்கு ஆரோக்கியத்தை பெற்று தருவதோடு பல நோய்களையும் விரட்டும். 

PREV
17
அட! இரவில் வெறும் 10 நிமிட 'வாக்கிங்'..  இத்தனை நோய்களை விரட்டுமா? 
அட! இரவில் வெறும் 10 நிமிட 'வாக்கிங்'..  இத்தனை நோய்களை விரட்டுமா?

இன்றைய நவீன யுகத்தில் உணவு பழக்கங்கள் துரிதமாக மாறி வருகின்றனர் ஆரோக்கியமான உணவுகளை விடவும் விரைவில் தயார் செய்யும் உறவுகளே மக்கள் நாடுகின்றனர் இப்படி ஆரோக்கியம் இல்லாத உணவு பழக்கங்களால் உடல் பருமன் சர்க்கரை வியாதி தைராய்டு போன்ற நூல்கள் மனிதர்களை ஆட்டிப்படைக்க தொடங்கியுள்ளது இதற்கான முக்கிய காரணமே சாப்பிட்டதும் தூங்குவது சாப்பிட்டதுமே ஒரே இடத்தில் அமர்ந்து கொள்வது போன்றது தான் சாப்பிட்டு விட்டு நன்றாக உடல் செயல்பாட்டில் ஈடுபட்டால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்க முடியும் இந்த பதிவு இரவு சாப்பிட்டதும் நடந்தது எவ்வளவு நன்மைகளை தரும் என தெரிந்து கொள்ளலாம். 

27
எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?

இரவு செரிப்பதற்கு எளிமையான உணவுகளை உண்ண வேண்டும். அதையும் இரவு 8 மணிக்கு முன்பாக சாப்பிடுவது நல்லது. இதை பின்பற்ற முடியாதவர்கள் நீங்கள் தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிட்ட பின்னர் 10 முதல் 30 நிமிடங்கள் வரை குறுநடை போடுவது பயனுள்ளதாக இருக்கும். ஆயுர்வேதத்தின் படி உணவுக்கு பின்னர் கொஞ்ச நேரம் நடப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, அத்துடன் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.  

37
சாப்பிட்ட பின் குறுநடை

இரவில் சாப்பிட்ட பின்னர் ஒரு குறுநடை போடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.  ஏற்கனவே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், உடல் பருமன், தூக்கமின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இரவு நேர நடைபயிற்சி மிகுந்த உதவியாக இருக்கும். நல்ல தூக்கம் வரும். இது மட்டுமின்றி நீங்கள் சாப்பிட்ட பின்னர் நடப்பதால் உங்களுடைய செரிமானம் மேம்பட்டு மலச்சிக்கல், வாயு தொல்லை, செரிமான கோளாறுகள் போன்றவையும் குறைகின்றன. 

47
குறையும் எடை:

இரவில் நடப்பது உங்களுடைய கலோரிகளை அதிகமாக எரிக்கிறது. எடை இழப்பு பயணத்திற்கு உதவியாக இருக்கும். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதால் அதிக ஆற்றல் செலவழிக்கப்பட்டு எடை குறையும். எடையை குறைக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக இரவு நேர வாக்கிங் செய்யலாம். 

இதையும் படிங்க:  அடேங்கப்பா!! வெறும் 30 நாள்களில் '4' கிலோ வரை எடை குறையுமா? பெஸ்ட் வாக்கிங் டிப்ஸ்!! 

57
இதய ஆரோக்கியம்:

சாப்பிட்ட பின்னர் நடப்பது உங்களுடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுகிறது. இதய நோய்களை உண்டாக்கும் கெட்ட கொழுப்பு, ரத்த அழுத்தம் போன்றவை குறைந்து சீராவதால் நோய்க்கான அபாயம் குறைகிறது. இதயத்தை பலப்படுத்த இரவு நேரம் நடைபயிற்சி உதவும்.  

இதையும் படிங்க:  காலைல வாக்கிங் போறீங்களா? அதை விட 'இந்த' நேரம் நடப்பதால் பல மடங்கு நன்மைகள்!!

67
நல்ல தூக்கம்:

தூக்கமின்மை பல பிரச்சினைகளுக்கு ஆணிவேராக இருக்கிறது.  நீங்கள் இரவில் நடப்பதால் உங்களுடைய மனநிலை மேம்பட்டு ஆழ்ந்த தூக்கம் கிடைக்கிறது. வயிறு உப்புசம், மலச்சிக்கல், வாயுத் தொல்லை, செரிமான கோளாறு போன்ற அசௌகரியங்கள் நீங்கி நிவாரணம் பெறுவீர்கள்.  இதனால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும். 

77
எப்போது நடக்க வேண்டும்?

இரவில் சாப்பிட்டபின் நடைபயிற்சி செய்வதற்கு சில வரைமுறைகள் உண்டு.  நீங்கள் ரொம்ப நேரம் நடக்க வேண்டிய அவசியம் இல்லை. சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் நடந்தால் போதும். சாப்பிட்ட உடனே நடக்காமல் பத்து நிமிடங்கள் கழித்து நடக்க தொடங்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories