வெறும் பழைய கஞ்சி தண்ணீர் போதும்.. பருக்கள் கரும்புள்ளிகள், நீங்கி ஜொலிக்கும் முகம்!! 

Published : Feb 20, 2025, 06:35 PM IST

Rice Water Face Mask : அரிசி தண்ணீர் அல்லது கஞ்சி தண்ணீரில் முகம் கழுவினால் முகம் பளபளப்பாக மாறுவதோடு,  அதை குடிக்கும்போது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் தரும். 

PREV
18
வெறும் பழைய கஞ்சி தண்ணீர் போதும்.. பருக்கள் கரும்புள்ளிகள், நீங்கி ஜொலிக்கும் முகம்!! 
வெறும் பழைய கஞ்சி தண்ணீர் போதும்.. பருக்கள் கரும்புள்ளிகள், நீங்கி ஜொலிக்கும் முகம்!!

முந்தைய காலங்களில் சோறு மீதமானால் அதில் தண்ணீர் ஊற்றி மறுநாள் பழைய கஞ்சியாக சாப்பிடுவார்கள். அந்த நீரை அருந்துவார்கள்.  இன்றைய நவீன யுகத்தில் பலர் ஒரு நேரத்திற்கு மட்டும் சோறு சமைத்துவிட்டு, இருவேளைகளுக்கு டிபன் ஐட்டங்களில் இறங்கி விட்டனர். ஆனால் அந்த பழைய கஞ்சி தண்ணீரின் மகிமையை இப்போதும் மறுக்க முடியாது. உங்களுடைய முகத்திற்கு சோறு வடித்த தண்ணீர் அல்லது கஞ்சி தண்ணீர் பயன்படுத்தும்போது சரும அழகு மேம்படுகிறது. இது தோல் பராமரிப்பிற்கு சிறப்பாக உதவுகிறது. சோறு வடித்த தண்ணீரில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் காணப்படுகின்றன. எனவே சருமத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த உடலையும் பராமரிக்க உதவுகிறது. இதை சருமத்திற்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும், இதன் மற்ற நன்மைகள் என்ன என்பதை இங்கு காணலாம். 

28
முகத்தில் பயன்படுத்துவது எப்படி?

காட்டன் துணி அல்லது டிஸ்யூ பேப்பரை கஞ்சி தண்ணீர் அல்லது வடித்த தண்ணீரில்  நனைத்து முகத்தின் மீது வைக்கவும். இதை ஒரு மாஸ்க் போல 20 நிமிடங்கள் போட்டுவிட்டு நீக்கலாம். 

38
கஞ்சி தண்ணீர் செய்வது எப்படி?

சமைத்த சோற்றை வடிக்கும்போது கிடைக்கும் நீரை சூடாக அருந்தலாம். இது நல்லது. இதை ஆற விட்டு ஜெல்லி போன்ற பதம் வந்ததும் முகத்திற்கு பயன்டுத்தலாம். இதை விட கஞ்சி தண்ணீர் கூடுதல் நன்மை பயக்கும். அதை தயாரிக்க சமைத்த சோற்றை ஒரு கிளாஸில் கொஞ்சம் போட்டு தண்ணீர் ஊற்றி அதை ஒரு இரவு அல்லது 2 முதல் 3 நாட்கள் நொதிக்க வைத்து  கஞ்சி தண்ணீர் தயார் செய்யலாம். இத்துடன் கருப்பு உப்பு கலந்து காலையில் அருந்தலாம். இந்த தண்ணீரில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன. 

48
நீரிழப்பு தடுப்பு:

நாள்தோறும் கஞ்சி தண்ணீரை குடிப்பதால் உடல் நீரேற்றமாக இருக்கும். உடலில் நீரிழப்பை தடுக்க அடிக்கடி இந்தத் தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்தலாம். கோடையில் போதுமான தண்ணீர் குடிக்காமல் ஏற்படும் நீரிழப்பை சரி செய்ய கஞ்சி தண்ணீரை குடிக்கலாம். இது வெறும் நீர் அல்ல இதில் ஊட்டச்சத்துகள் பல உள்ளன. உடலில் உள்ள அசுத்தங்களை நீக்க உதவுகிறது. 

58
செரிமானம்:

செரிமானத்தை மேம்படுத்த கஞ்சி தண்ணீரைக் குடிக்கலாம். இதில் காணப்படும் ஸ்டார்ச்  செரிமானத்திற்கு உதவும். வயிறு வீக்கம், செரிமான பிரச்சனை அல்லது வாயுத்தொல்லையால் அவதிப்பட்டால் நாள்தோறும் ஒரு கிளாஸ் கஞ்சித் தண்ணீரைக் குடிக்கலாம். இது புரோபயாடிக் பானம். குடல் ஆரோக்கியத்திற்கு உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் எனவும் சொல்லப்படுகிறது.  

68
உடல் சூடு குறையும்!

கஞ்சி தண்ணீர் உடலை குளிரச் செய்யும். உடல் உஷ்ணம் காரணமாக கை அல்லது கால்களில் எரியும் உணர்வு உள்ளவர்கள் கஞ்சி தண்ணீர் குடிக்கலாம்.  ஹார்மோன் சமநிலையின்மையை சரி செய்ய உதவுகிறது. பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் உள்ளது. இதை சரிசெய்ய கஞ்சி தண்ணீர் உதவும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் கஞ்சி தண்ணீர் குடித்தால்  நிவாரணம் கிடைக்கும். 

இதையும் படிங்க:  ஒரு செலவு இல்லாமல் நீங்களும் கொரியன் பெண்களைப் போல அழகாக இந்த பார்முலாவை ட்ரை பண்ணுங்க..!!

78
சிறுநீர் தொற்று நீங்கும்!

நீரிழப்பு காரணமாக சிலருக்கு சிறுநீர் தொற்று ஏற்படலாம். சுத்தம் இல்லாத கழிப்பறையை பயன்படுத்துவதும், சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதும் சிறுநீர் தொற்றுக்கு காரணமாக இருக்கலாம். சிறுநீர் கழித்தால் எரியும் உணர்வு வரலாம். வலிக்கலாம். கஞ்சி  தண்ணீர் குடிப்பது இந்த பிரச்சனையை தணிக்க உதவும் அருமருந்து.  அதை குடிப்பதால் விரைவில் குணமாகும். 

இதையும் படிங்க:  சோறு வடித்த  தண்ணீரில் இத்தனை நன்மைகளா?! 'இப்படி' யூஸ் தெரியாம போச்சே!!

88
மாதவிடாய் வலி நிவாரணம்:

பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உயிர் போகும் அளவுக்கு வலிக்கும். இந்த மாதிரி வலியால் சிரமப்படுபவர்கள் கஞ்சி தண்ணீர் குடித்தால் இலகுவாக உணர்வார்கள். அதிக ரத்தப்போக்கு, கடுன் வயிற்று வலிக்கு கஞ்சி தண்ணீர் நல்லது. வலி நிவாரணம் கிடைக்க  உதவும் என பரவலாம நம்பப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories