
சரும பராமரிப்பில் முக்கியமானது முகம் கழுவுதல். ஒரு நாளைக்கு காலை, மாலை என இரண்டு வேளைகளில் முகம் கழுவுவது அவசியமாகிறது. நீங்கள் மேக்கப் போடுபவராக இருந்தால் இரவில் தூங்கும்போது அவசியம் முகம் கழுவ வேண்டும். முகத்தை சோப்பு போட்டு கழுவுவதை விட ஃபேஸ் வாஷ் வைத்து கழுவுவது சிறந்தது. ஆனால் எல்லா ஃபேஸ் வாஷ்களும் உங்களுடைய சருமத்தை அழகாக வைத்துக் கொள்ளும் என சொல்லிவிட முடியாது. ஃபேஸ் வாஷ்களில் உள்ள சில பொருட்கள் சரும பராமரிப்பிற்கு அத்தியாவசியமானவை. நாம் தினமும் முகம் கழுவும் போது முகத்தில் படிந்துள்ள அழுக்கு நீங்கி சுத்தமாகிறது. அழுக்கு உள்பட இறந்து செல்கள் நீங்கும்போது சருமம் புதிது போல பளபளப்பாக இருக்கும். ஒருவேளை நாம் முகம் கழுவாமல் அப்படியே விட்டுவிட்டால் முகத்தில் படிந்துள்ள அழுக்கு, சரும துளைகளில் அடைத்துக் கொள்ளும். இதனால் முகப்பரு உள்ளிட்ட சரும பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் நீங்கள் சரியான ஃபேஸ் வாஷ் வைத்து முகத்தை கழுவினால் இந்த பிரச்சனை தடுக்க முடியும். ஃபேஸ் வாஷில் இருக்க வேண்டிய பொருள்கள் குறித்து இங்கு காண்போம்.
இது உங்களுடைய சருமத்தினை நீரேற்றமாக வைக்க உதவுகிறது. உங்களுக்கு வயதாகும்போது சருமத்தில் உள்ள ஹைலூரோனிக் அமிலம் குறைகிறது. ஹைலூரோனிக் அமிலம் கொண்ட ஃபேஸ் வாஷ் பயன்படுத்தினால் சரும ஈரப்பதம் பராமரிக்கப்பட்டு சுருக்கங்கள் குறையும். இந்த அமிலம் ஆயில் ஸ்கின், சென்சிடிவ் ஸ்கின் என எல்லா தோல் வகையினருக்கும் நல்லது.
ரெட்டினால்:
ரெட்டினால் வைட்டமின் 'ஏ' பிரிவை சேர்ந்தது. இது கண்ணுக்கு மட்டுமல்ல தோலுக்கும் நல்லது. சருமத்தில் வயதாகும் தன்மையை எதிர்த்து போராடும். ஏனென்றால் இவை கொலாஜன் உருவாவதைத் தூண்டும். இதனால் சருமம் இளமையாக தெரியும். முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது. ஏற்கனவே முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது. ஆனாலும் சிலருக்கு ரெட்டினோல் ஒவ்வாமையாக இருக்கலாம். அதனால் முகத்தில் முழுமையாக பயன்படுத்தாமல் சிறிதளவில் சருமத்தின் ஒரு சிறிய பகுதியில் போட்டு பாருங்கள்.
இதையும் படிங்க: குறையாத அழகுக்கு எத்தனை முறை 'முகம்' கழுவனும்? பலர் அறியாத தகவல்!!
பீட்டா-ஹைட்ராக்ஸி அமிலத்தை தான் சாலிசிலிக் அமிலம் என்கிறார்கள். இது முகப்பருக்களை நீக்க உதவுகிறது. சருமத்தில் அழுக்கு, தூசு போன்றவைகளை நீக்கி மூடப்பட்ட சரும துளைகளை திறக்க உதவுகிறது. ஏனென்றால் இந்த அமிலம் கலந்த ஃபேஸ் வாஷ்கள் பயன்படுத்தும் போது இறந்த செல்கள் அகற்றப்படுகின்றன. இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் முகத்தில் காணப்படும் முகப்பருக்கள் அதனால் ஏற்படும் முகம் சிவத்தல், வீக்கம் ஆகியவற்றையும் இவை நீக்குகின்றன.
வைட்டமின் சி:
நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும் வைட்டமின் சி சருமத்திற்கும் நல்ல பலன்களை தருகிறது. வெயிலுக்கு கருத்த முகம் பளபளப்பாக வைட்டமின் சி கலந்த ஃபெந்ஸ் வாஷ் உதவுகிறது. இதனை பயன்படுத்தும் போது மெலனின் உருவாவது குறைக்கப்படுகிறது. முகத்தில் காணப்படும் கருந்திட்டுகள் நீங்கும். முகத்தை வெயில், தூசு போன்றவற்றில் இருந்து காக்க பயன்படுகிறது.
இதையும் படிங்க: முகத்திற்கு சோப்பு போடுறது குத்தமா? இதுல கூட பக்க விளைவுகள் இருக்கு
கிளிசரின் உள்ள ஃபேஸ் வாஷ் சருமத்தை ஈரப்பதமாக வைக்கும். இது சருமத்தை நீண்ட நேரம் நீரேற்றமாக வைத்திருப்பதால் சரும வறட்சி ஏற்படாது. இது சருமத் துளைகளை மூடாது. ஏற்கனவே அதிகமான முகப்பருக்களால் பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு இந்த ஃபேஸ்வாஷ் நல்ல பலன் தரும். தோல் வறட்சியை தடுப்பதால் சரும எரிச்சலிலிருந்து விடுபடலாம்.
கருப்பு அரிசி:
பிளாம் ரைஸ் என சொல்லப்படும் கருப்பு அரிசியில் வைட்டமின்கள் பி1, பி2 ஆகியவை உள்ளன. இந்த அரிசி ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும் அற்புத பொருள். இதில் உள்ள வைட்டமின் ஈ சருமத்தை ஈரப்பதமாக வைக்கும். சூரியனில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர்களிலிருந்து சருமத்தை பாதுகாக்கும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவிடம் இருந்து காக்கின்றன. கரும்புள்ளிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த கருப்பு அரிசி இருக்கும் ஃபேஸ் வாஷ் நல்ல தேர்வாகும்.