முடி அடர்த்தியாக இந்த '4' பொருள் வச்சி சூப்பர் ஹேர் பேக்; எப்படி யூஸ் பண்ணணும் தெரியுமா?
பொதுவாக ஒவ்வொருவரு பெண்களும் தங்களது கூந்தல் நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். ஆனால் இந்த காலத்தில் மாசுபாடு, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுகளை சாப்பிடுதல், ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துதல் போன்ற பல காரணங்களால் தலை முடி தொடர்பான பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
25
முடி அடர்த்தியாக மாற்ற ஹேர் பேக்.
முடி வறண்டு போதல், முடி உதிர்தல், முடி பலவீனமாகுதல் போன்றவை ஆகும். இந்த பிரச்சனைகளை சமாளிக்க பலர் விலை உயர்ந்த ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால், இதைத்தவிர வீட்டில் இருக்கும் சில பொருட்கள் உங்களது தலைமுடியை அடர்த்தியாகவும், வலுவாகவும், பளபளப்பாகவும் மாற்ற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஹேர் பேக் உங்கள் தலைமுடிக்கு இயற்கையான ஊட்டச்சத்தை அளித்து ஆரோக்கியமாக வைக்கும். இப்போது அந்த ஹேர் பாக்கிற்கு தேவையான பொருட்கள் என்ன, அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
35
தேவையான பொருட்கள்:
செம்பருத்தி பூக்கள் - 4-5
செம்பருத்தி இலைகள் - 4-5
கற்றாழை ஜெல் - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
இந்த ஹேர் பேக் செய்யும் முதலில் செம்பருத்தி பூக்கள், செம்பருத்தி இலைகள் இரண்டையும் தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். இப்போது மிக்ஸி ஜாரில் செம்பருத்தி பூ செம்பருத்தி இலை கற்றாழை ஜெல் தேங்காய் எண்ணெய் காய்கறி சேர்த்து நன்றாக அரைத்து பேஸ்ட் போல் எடுத்துக் கொள்ளுங்கள் இப்போது இந்த பேஸ்ட்டை உங்களது தலைமுறையில் நன்கு தடவி சுமார் ஒரு மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு லேசான ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்க வேண்டும்.
இந்த ஹேர்பெக்ட் உங்களது தலைமுடியை மென்மையாக்கும் மற்றும் அடர்த்தியாக மாற்றும். வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஹேர் பேக் எந்தவித இரசாயனமும் இல்லை என்பதால் முடி வளர்ச்சிக்கு உதவும். சிறந்த பலன்களைப் பெற இந்த ஹேர் பேக்கை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்த வேண்டும்.