முடி உதிர இப்படியும் ஒரு காரணமா? இளம் வயதினரே நோட் பண்ணுங்க!

Published : Feb 14, 2025, 03:49 PM IST

Hair Loss In Young Adults : இளம் வயதிலேயே முடி உதிர்தலுக்கான காரணங்கள் என்ன என்று இங்கு காணலாம்.

PREV
14
முடி உதிர இப்படியும் ஒரு காரணமா? இளம் வயதினரே நோட் பண்ணுங்க!
முடி உதிர இப்படியும் ஒரு காரணமா? இளம் வயதினரே நோட் பண்ணுங்க!

முடி உதிர்தல் ஒரு சாதாரண பிரச்சனை. ஆனால் சிலருக்கு முடி  அதிகமாகவே கொட்டுகிறது. உண்மையில் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு முடி கொட்டுதல் பொதுவானது தான். ஆனால் சமீபகாலமாகவே, இளைஞர்கள் மத்தியில் இந்த பிரச்சனை அதிகரித்து வருகின்றன. 30 வயதிற்கு முன்பு வழுக்கை விழுகிறது என இளைஞர்கள் பலர் புலம்புகிறார்கள். இப்படி இளம் வயதிலேயே முடி கொட்டுவதற்கான காரணம் என்ன? அதை தவிர்ப்பது எப்படி? என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

24
மன அழுத்தம்:

உளவியல் கருத்துப்படி, இளம் வயதிலேயே முடி கொட்டுவதற்கு முக்கிய காரணம் அதிகமான அழுத்தம் தான் அதிகப்படியான மன அழுத்தம் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். இது தவிர, இளைஞர்கள் விரும்பி சாப்பிடும் ஜங்க் ஃபுட் கூட முடி உதிர்தலுக்கு ஒரு காரணமாகும் தெரியுமா? ஆம், இன்று பெரும்பாலான இளைஞர்கள் ஆரோக்கியமற்ற உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். அவற்றில் புரதம் குறைவாகவும், கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாகவும் உள்ளன. இதனால் உடலில் வீக்கம் மற்றும் வெப்பம் அதிகரிக்கும். இதன் காரணமாக முடி உதிர்தல் அதிகரிக்கும்.

இதையும் படிங்க:  கொத்து கொத்தா முடி கொட்டுதா? நீங்க சாதாரணமா பண்ற இந்த பழக்கத்தை விடுங்க!

34
உச்சந்தலையில் இருக்கும் பிரச்சினை:

உச்சந்தலையில் ஏற்படும் தடிப்பு, அலர்ஜி அல்லது மோசமான பொடுகு பிரச்சனை ஆகியவை இளம் வயதிலேயே முடி உதிர்தலை ஏற்படுத்தும். இதன் காரணமாக முடி வளராது. இது தவிர புகைப்பிடிப்பவர்களுக்கும் முடி உதிர்தல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று ஆய்வுகள் கண்டறிந்தன. 

இதையும் படிங்க: உப்பு தண்ணில தலைக்கு குளிச்சா முடி உதிருமா? பலரும் செய்ற தவறான செயல்

44
இளம் வயதிலேயே முடி உதிர்தல்:

நீங்கள் எப்போது இரவு தூங்க செல்கிறீர்கள், எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள், உடற்பயிற்சி செய்கிறீர்களா? மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா? போன்ற அனைத்தும் இளம் வயதிலேயே முடி உதிர்தலுக்கு முக்கிய காரணமாகின்றன. இது தவிர, ஊட்டச்சத்து குறைபாடுகள் அல்லது சில மருந்துகளாலும் இளம் வயதிலேயே முடி உதிர்தல் ஏற்படலாம். எனவே மருத்துவர்களிடம் சென்று இதற்கான காரணத்தை அறிந்து கொண்டு அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள். முடி உதிர்வது பிரச்சனை நின்றுவிடும்.

Read more Photos on
click me!

Recommended Stories