MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • கொத்து கொத்தா முடி கொட்டுதா? நீங்க சாதாரணமா பண்ற இந்த பழக்கத்தை விடுங்க!

கொத்து கொத்தா முடி கொட்டுதா? நீங்க சாதாரணமா பண்ற இந்த பழக்கத்தை விடுங்க!

Hair Loss Causes : உங்களிடம் இருக்கும் சில பழக்கங்கள் தான் முடி உதிர்வுக்கு காரணம். அது குறித்து இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 17 2025, 07:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bad habits causing hair loss in tamil

Bad habits causing hair loss in tamil

தற்போது முடி உதிர்வு என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகவே மாறிவிட்டது. முடி உதிர்வால் பலரும் கவலையில் உள்ளனர். சிலருக்கு முடி உதிர்தலுக்கு மரபணு மற்றும் சில மருந்துகள் கூட காரணமாகும். ஆனால், பலருக்கு அவர்கள் அன்றாட பழக்க வழக்கங்களால் தான் முடி உதிர்கிறது. நாம் நம்முடைய வாழ்க்கையில் தினமும் செய்யும் சில பழக்கவழக்கங்கள் நம்முடைய தலைமுடியை பலவீனமாக்குகின்றது. மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவை உடைந்து விடுகிறது. எனவே முடி உதிர்வை ஏற்படுத்தும் நம்மிடம் இருக்கும் அந்த கெட்ட பழக்கங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Bad habits causing hair loss in tamil

Bad habits causing hair loss in tamil

அடிக்கடி சூடான நீரில் குளிப்பது:

பொதுவாக குளிர்காலத்தில் நாம் வெந்நீரில் தான் குளிப்போம். ஆனால் அடிக்கடி வெந்நீரில் தலைக்கு குளித்தால் உச்சம் தலையில் இருக்கும் இயற்கையான எண்ணெய்கள் அகன்றுவிடும். அதன் காரணமாக முடி வறண்டு விடும் மற்றும் பலவீனமடையத் தொடங்கும். எனது வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே வெந்நீரில் குளிக்கலாம். ஆனால் அதிக சூடான நீரில் அல்ல.

இறுக்கமாக தலை முடியை பின்னுதல்:

இறுக்கமாக தலை முடியை பின்னுதல், போனிடெயில் அல்லது கொண்டை போடுதல் ஆகியவை முடியின் வேர்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக முடி உதிர ஆரம்பிக்கும். எனவே நீங்கள் எப்போதும் தலைமுடியை வாரிநாளும் இறுக்கமாக கட்டுவதை தவிர்க்க வேண்டும்.

இதையும் படிங்க:  இளம் வயதில் முடிகொட்டும் பிரச்சனை; இதுக்கு என்ன காரணம் தெரியுமா?

35
Bad habits causing hair loss in tamil

Bad habits causing hair loss in tamil

அடிக்கடி ஸ்டைலிங் செய்வது:

ஷாப்பிங் சென்றாலோ, அலுவலகத்திற்கு சென்றாலோ தலைமுடியை நாம் ஸ்டைலிங் செய்யாமல் வெளியே செல்ல மாட்டோம். இதற்கு ஹேர் டிரையர், கர்லிங் அயர்ன்கள், ப்ளோர் ட்ரையர் போன்றவற்றை அதிகமாக தலைமுடிக்கு பயன்படுத்தினால் முடியில் இருக்கும் இயற்கையான ஈரப்பதமானது அன்று விடும். இதன் காரணமாக சீக்கிரமே முடி வலுவிழந்து உடைய ஆரம்பிக்கும். எனவே நீங்கள் தலைமுடிக்கு இது போன்ற கருவிகளை பயன்படுத்தும் போது அதற்குரிய ஸ்பிரேயை பயன்படுத்துங்கள். மேலும் அவற்றை குறைவாகவும் பயன்படுத்துங்கள்.

தவறான சீப்பை பயன்படுத்துதல்:

முடியை சீப்புவதற்கு கடுமையான அல்லது தவறான சீப்பை பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அவை முடி உதிர்வதற்கு வழிவகுக்கும். அதுபோல ஈரமான தலையை ஒருபோதும் சீப்ப வேண்டாம் மற்றும் தலைமுடியை சீப்பும்போது அழுத்தமாக அல்லாமல், மென்மையாக சீப்பவும்.

45
Bad habits causing hair loss in tamil

Bad habits causing hair loss in tamil

ஆரோக்கியம் மற்ற உணவை சாப்பிடுவது:

உங்களது உணவில் புரதம், இரும்பு, துத்தநாகம் மற்றும் பல வைட்டமின்கள் குறைவாக இருந்தால் முடி உதிர்வு பிரச்சனை அதிகரிக்கும். எனவே எப்போதும் ஆரோக்கியமான உணவை மட்டுமே சாப்பிடுங்கள். இதனால் முடி ஆரோக்கியமாக இருக்கும்.

அடிக்கடி கலரிங் செய்தல்:

நீங்கள் உங்கள் தலை முடிக்கு கலரிங், ஸ்ட்ரெய்ட்டனிங் போன்றவற்றை அடிக்கடி செய்தால் முடி வழுவிழந்து உடைய ஆரம்பிக்கும். மேலும் நீங்கள் இரசாயன சிகிச்சை செய்ய விரும்பினால், லேசான மற்றும் குறைவான தீங்கு விளைவிக்கும் பொருட்களை மட்டுமே தலைமுடிக்கு பயன்படுத்துங்கள்.

இதையும் படிங்க:   முடி நீளமா வளர.. சின்ன வெங்காயத்தோட இந்த '1' எண்ணெய் சேர்த்து தேய்ச்சு பாருங்க!!

55
Bad habits causing hair loss in tamil

Bad habits causing hair loss in tamil

அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டம்:

உங்களுக்கு அதிகமான அழுத்தம் மற்றும் பதட்டம் இருந்தால் முடி முன்கூட்டியே உதிர ஆரம்பிக்கும். எனவே மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க யோகா, தியானம் சிறிய உடற்பயிற்சியை உங்களது அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தலைமுடியை சரியாக பராமரிக்காமல் இருப்பது:

உங்களது உச்சந்தலை சுத்தமாக இல்லையென்றால் தலைமுடி உதிர ஆரம்பிக்கும். ஏனெனில் தலையில் இருக்கும் அழுக்கு, எண்ணெய் மற்றும் தூசிகள் முடி உதிர்வதற்கு வழிவகுக்கும். எனவே தலை முடியை சுத்தமாக வையுங்கள். அதுபோல எண்ணெய் கொண்டு தலைமுடிக்கு நன்றாக மசாஜ் செய்யுங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
முடி உதிர்தல் தடுப்பு
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
முதல்ல கண்ணுல பட்டது எது? உங்க மூளை எப்படி வேலை செய்யுதுன்னு அச்சுப்பிசகாம உடைக்கும் வைரல் ஆப்டிகல் இல்யூஷன்!
Recommended image2
வேலை முடிந்து கண்கள் எரிகிறதா? ஆபத்தான நோயின் அறிகுறி; தப்பிக்க மருத்துவர்கள் சொல்லும் 4 வழிகள்!
Recommended image3
Breakup Recovery: லவ் ஃபெயிலியர் வலியில இருக்கீங்களா? பிரேக்கப்ல இருந்து வெளில வர 3 ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved