அடிக்கடி ஆவி பிடித்தால் முகத்திற்கு என்னாகும் தெரியுமா?

Published : Feb 13, 2025, 11:02 AM IST

Face Steaming Benefits : ஃபேஸ் ஸ்டீமிங் செய்வதன் மூலம் பல பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன. அதன் நன்மைகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.

PREV
14
அடிக்கடி ஆவி பிடித்தால் முகத்திற்கு என்னாகும் தெரியுமா?
அடிக்கடி ஆவி பிடித்தால் முகத்திற்கு என்னாகும் தெரியுமா?

பொதுவாக நம் அனைவருமே அழகான மற்றும் பளபளப்பான சருமத்தை தான் விரும்புகிறோம். இதற்காக சந்தைகளில் விற்கக்கூடிய பலவிதமான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் உண்மையில் அவை சருமத்திற்கு நன்மை பயக்குமா? என்ற கேள்வி எழுந்தால், அதற்கான பதில் இல்லை. ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, முகத்தில் ஸ்டீமிங் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும். இது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைக்கும். மேலும் உங்கள் முகத்தின் பளபளப்பை அதிகரிக்கவும், சருமத்தில் உள்ள தூசி மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்யவும் உதவுகிறது. இப்போது முகத்திற்கு ஆவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: தண்ணீரில் இந்த 1 பொருள் போட்டு ஆவி பிடிப்பதால் முகத்தில் இத்தனை ஜொலிப்பு கிடைக்குமா? அறிவியல் உண்மை தெரியுமா?

24
முகத்திற்கு ஆவி பிடிப்பதன் நன்மைகள்:

1. ஃபேஸ் ஸ்டீமிங் முக சோர்வை நீக்கி ரத்த ஓட்டத்தை அதிகரித்து, முகத்தில் உள்ள துளைகளை திறக்கும்.

2. முகத்திற்கு ஆவி பிடிப்பதால் கரும்புள்ளிகள் நீக்கி, சருமத்தை மென்மையாக்க உதவுகிறது.

3. இது சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது. ஆம், உங்களது தோளில் சுருக்கங்கள் தோன்ற ஆரம்பிக்கும் போது ஆவி பிடிப்பதன் மூலம் இறந்த சருமத்தை அகற்றி, உங்கள் சருமத்திற்கு பளபளப்பை கொடுக்கும்.

4. ஃபேஸ் ஸ்டீமிங் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. எனவே உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் நீங்கள் ஆவி பிடிப்பதன் மூலம் இந்த பிரச்சினையை எளிதாக தீர்த்து விடலாம். ஏனெனில் இது உங்களது சருமத்தை இறுக்குமாக்கும்.

34
முகத்திற்கு ஆவி பிடிப்பதன் நன்மைகள்

5. முகத்திற்கு ஆவி பிடிப்பதுன் மூலம் பருக்களின் பிரச்சனையை போக்கிவிடலாம் உண்மையில் முகத்தில் அழுக்கு சேர்வதால் பருக்கள் வரும். இத்தகைய சூழ்நிலையில், ஃபேஸ் ஸ்டீமிங் செய்வதன் மூலம் இந்த அழுக்களை வெளியேற்றி, பருக்களின் பிரச்சினையையும் குறைக்கிறது.

6. முகத்திற்கு ஆவி பிடிப்பதன் மூலம் முகத்தில் நச்சு கூறுகள் வெளியேறி, அதன் காரணமாக உங்கள் முகம் சுத்தமாகிறது. இதனால் முகம் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும்.

7. ஃபேஸ் ஸ்டீமிங் சருமத்தை இருப்பதும் ஆக்குகிறது மற்றும் முகத்திற்கு இயற்கையான பளபளப்பை அளிக்கின்றது.

8. முகத்திற்கு ஆவி பிடிப்பது கருவளையம் பிரச்சனையை தீர்க்கும் மேலும் கண் சோர்வையும் நீக்கும்.

44
குறிப்பு :

முகத்திற்கு ஆவி பிடித்த பிறகு ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது துண்டு கொண்டு சுத்தம் செய்த பின் ஸ்கிரப் செய்யவும். வாரத்திற்கு ஒரு முறையாவது ஃபேஸ் ஸ்டீமிங் எடுத்துக் கொள்ளுங்கள் இதனால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். மேலும் இது உங்கள் முகத்தை பளபளப்பாகும்.

இதையும் படிங்க:  முகத்திற்கு சோப்பு போடுறது குத்தமா? இதுல கூட பக்க விளைவுகள் இருக்கு

Read more Photos on
click me!

Recommended Stories