அமர்ந்த நிலையில் வேலை செய்பவர்களின் எடை அதிகரிப்பை குறைக்க, மனச்சோர்வை குறைக்க, தசைகளின் இயக்கத்தை குறைக்க மைக்ரோ வாக்கிங் உதவுகிறது. ரொம்ப நேரம் அமர்ந்திருந்தால் வளர்சிதை மாற்றம் தாமதமாகும்; இரத்த ஓட்டமும் பாதிக்கிறது. இது மட்டுமின்றி நாள்பட்ட நோய் அபாயத்தையும் அதிகரிக்கக் கூடும். இதிலிருந்து உடலை பாதுகாக்க மைக்ரோ வாக்கிங் உதவுகிறது. மைக்ரோ வாக்கிங் செல்வதை சிறு சிறு டாஸ்குகளாக பிரித்து 5 அல்லது 10 நிமிடங்களாக நடந்து முடித்தால் மகிழ்ச்சி ஹார்மோன்களான டோபமைன், எண்டோர்பின்கள் சுரக்கலாம். இது உங்களுடைய உற்சாகத்தை அதிகப்படுத்தும். கவனம் அதிகரிக்கும். படைப்பாற்றல் மேம்படும். மன அழுத்தம் குறையும்.