எந்த வயதிலும் வரக்கூடியது சர்க்கரை நோய். இதைத் தவிர்க்க பலரும் சர்க்கரை சேர்க்காமல், உணவு கட்டுப்பாட்டின் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர்.
உணவு கட்டுப்பாட்டால் மட்டும் சர்க்கரை நோயைத் தடுக்க முடியாது. வாழ்க்கை முறையிலும் மாற்றங்கள் தேவை. எனவே ஒவ்வொருவரும் இந்த விஷயங்களை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
26
தூக்கமின்மை
போதுமான தூக்கம் இல்லையென்றால், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தினமும் 8 மணி நேரம் தூங்குவது உங்கள் உடல்நலத்தை மேம்படுத்தும், சர்க்கரை நோய் வாய்ப்பைக் குறைக்கும்.
36
உடற்பயிற்சி
உடலுக்கு போதுமான உடற்பயிற்சி இல்லையென்றாலும் சர்க்கரை நோய் வரலாம். உடல் அசைவு குறையும்போது, குளுக்கோஸை வெளியேற்ற முடியாமல் போகும். இது சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும். உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
எப்போதும் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளது. இது இன்சுலினை எதிர்க்கும், குளுக்கோஸ் அளவை அதிகரிக்கும். உடற்பயிற்சி மூலம் இதைத் தடுக்கலாம்.
56
குடல் ஆரோக்கியம்
இன்சுலின் உணர்திறனில் குடல் நுண்ணுயிரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சரியான அளவில் உணவு உட்கொள்ளும்போது, குடல் பாக்டீரியாக்கள் அதை சிறு சங்கிலி கொழுப்பு அமிலங்களாக மாற்றுகின்றன. இது சாப்பிட்ட பிறகு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.
66
உணவு நேரம்
சரியான நேரத்தில், சரியான அளவில் உணவு உட்கொள்ள வேண்டும். இரண்டு மணி நேர இடைவெளியில் சிறிய அளவில் உணவு சாப்பிடுவது சர்க்கரை நோயைத் தடுக்கும். சரியான நேரத்தில் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.