கோடைகாலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய உணவுகளை உண்பது அவசியம். ஏனென்றால் கோடையில் உடலில் அதிக அளவு நீரிழப்பு ஏற்படும். இதனால் சிலருக்கு மயக்கம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. உடலில் ஏற்படும் அதிகப்படியான நீரிழப்பை தடுத்து உடலை நீரோட்டமாக வைத்திருக்க அதற்கேற்ற உணவுப் பழக்கத்தை பின்பற்றுவது அவசியம். இந்த பதிவில் ஊறவைத்த திராட்சையை உண்பதால் உங்களுடைய ஆரோக்கியம் எவ்வாறு மேம்படுகிறது என காணலாம்.
27
ஊறவைத்த உலர் திராட்சை:
ஊறவைத்த உலர் திராட்சையை உண்பது கோடைகாலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். திராட்சைக்கு சூடான தன்மை இருந்தாலும் அதை ஊற வைத்து உண்பதால் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். உடலில் இருக்கும் சூட்டை அதிகரிக்காது. உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும். உடல் நீரோட்டமாக இருக்கும். செரிமானம் மேம்படவும் இது உதவுகிறது.
37
எப்போது சாப்பிட வேண்டும்?
காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிட வேண்டும். இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவிட்டு காலை உண்ணலாம். ஊற வைத்த தண்ணீரும் நல்லது. அதனையும் குடிக்கலாம்.
உடலில் சேரும் கழிவுகளை நீக்க உணவு பழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டியது. நல்ல உணவுகள் தான் மருந்தாக அமையும். கோடைகாலத்தில் ஊறவைத்த திராட்சையை உண்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும். உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
57
செரிமானம்
கோடைகாலத்தில் பலர் மலச்சிக்கலால் அவதியறுவர். அவர்களுக்கு ஊறவைத்த உலர் திராட்சை தீர்வாக இருக்கும். திராட்சையில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. செரிமானம் மேம்படவும், மலச்சிக்கலை தடுக்கவும் உலர் திராட்சை ஊற வைத்து உண்ணலாம். அமிலத்தன்மை, அஜீரணம் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது.
67
ஹீமோகுளோபின்:
திராட்சையில் இரும்பு, தாமிரத்தின் அதிகம் உள்ளது. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரிக்கவும், ஹீமோகுளோபின் அளவை உயர்த்தவும் உலர் திராட்சை உதவும்.
77
இதய ஆரோக்கியம்;
திராட்சையில் உள்ள பொட்டாசியம் இதயத்தை பலப்படுத்த உதவுகிறது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைக்க உலர் திராட்சை ஊறவைத்து உண்ணலாம் ரத்த அழுத்தம் குறையும்போது இதய நோயின் அபாயமும் குறைகிறது.