தினமும் காலை வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீருடன் இந்த ஒரு பொருள் கலந்து குடித்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Benefits Of Drinking Jeera Water And Sabja Seeds : பொதுவாகவே பலரும் காலை எழுந்தவுடன் ஒரு கப் டீ அல்லது காபி தான் குடிக்க விரும்புவார்கள். ஆனால் உங்களது ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேற்படுத்த சப்ஜா விதைகள் கலந்த சீரக தண்ணீரை தினமும் காலை வெறும் வயிற்றில் குடியுங்கள். இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து வெறும் வயிற்றில் உட்கொண்டால் எண்ணற்ற நன்மைகளை பெறலாம். இப்போது சீரக தண்ணீரில் சப்ஜா விதை கலந்து குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
26
செரிமானத்தை மேம்படுத்தும்:
சீரகம் மற்றும் சப்ஜா விதைகள் செரிமான பண்புகளை கொண்டுள்ளதால், அவை செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டப் பெரிதும் உதவும். எனவே வெறும் வயிற்றில் சப்ஜா விதைகள் கலந்த சீராக தண்ணீரை குடிக்கும் போது செரிமானம் மேம்படும். வீக்கம், வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். முக்கியமாக மலச்சிக்கல் பிரச்சனையை தடுத்து, குடல் இயக்கத்தை ஊக்குவிக்க உதவும்.
36
எடை இழப்புக்கு உதவும்:
உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சப்ஜா விதை கலந்த சீரக தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சப்ஜா விதைகள் வயிரை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்கும். மறுபுறம் சீரக தண்ணீர் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து உடலில் உள்ள கொழுப்பை எரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இவை இரண்டும் சேர்ந்து எடை இழப்புக்கு உதவும்.
சீரக தண்ணீர் மற்றும் சப்ஜா விதையில் உள்ள ஆக்சிஜனேற்றிகள் சருமத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். சப்ஜா கலந்த சீரக தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வீக்கத்தை குறைக்கும், முகப்பருவை தடுக்கும். முக்கியமாக சருமத்தை தெளிவாகவும் பிரகாசமாகவும் மாற்ற உதவும். சீரகம் மற்றும் சப்ஜா விதைகளில் நச்சுத்தன்மையற்ற பண்புகள் உள்ளதால் சரும பிரச்சினைகளை ஏற்படுத்தும் நச்சுக்களை அகற்ற பெரிதும் உதவும்.
சப்ஜா விதைகள் கலந்த சீரகத் தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே இந்த நீரை குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும் மற்றும் தொற்று நோய்களிலிருந்து உங்களது உடலை பாதுகாக்கும்.
66
நச்சுத்தன்மையை நீக்கும்:
மோசமான உணவு பழக்கத்தால் உடலில் நச்சுக்கள் குவிந்து இருக்கும். எனவே தினமும் காலை வெறும் வயிற்றில் சப்ஜா விதைகள் கலந்த சீரக தண்ணீரை குடித்து வந்தால் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்த உதவும். சப்ஜா மற்றும் சீரகத் தண்ணீர் இயற்கையாகவே நச்சுத்தன்மை ஏற்றதாக செயல்படுவதால் இது உங்களது உடல் சுத்தப்படுத்தி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.