காலை உணவு சாப்பிட கூட டைம் இல்லையா? அப்ப இந்த விஷயத்துல கவனம் தேவை!!

Published : Mar 17, 2025, 11:55 AM ISTUpdated : Mar 17, 2025, 12:00 PM IST

காலை உணவு தவிர்ப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இங்கு காணலாம்

PREV
15
காலை உணவு சாப்பிட கூட டைம் இல்லையா? அப்ப இந்த விஷயத்துல கவனம் தேவை!!

Breakfast Skipping Effects On Health : பெரும்பாலானவர் காலையில் எழுந்தவுடன் ஒரு கப் டீ அல்லது காபியுடன் தங்களது நாளை தொடங்க விரும்புவார்கள். பிறகு அலுவலக செல்லும் அவசரத்தில் நேரம் இல்லாமல் சாப்பிடாமல் சென்று விடுவார்கள். பலரும் காலை உணவை தவிர்ப்பதே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், காலை உணவு தவிர்க்கும் பழக்கம் ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் தெரியுமா? இப்போது காலை உணவு தவிர்ப்பதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அது ஏன் முக்கியம் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

25
வளர்சிதை மாற்றத்தில் தாக்கம்:

காலை உணவை தவிர்த்தால் ஏற்படும் முக்கிய விளைவுகள் ஒன்றுதான் வளர்ச்சிக்கு மாற்றத்தில் தாக்கம். காலை உணவை தவிர்க்கும் போது உடலில் உணவு ஏதுவுமே இல்லாமல் வெறுமனே இருக்கும். இதனால் உங்களது வளர்ச்சியை மாற்றம் மெதுவாகும். இப்படி தொடர்ந்து நீடித்தால் அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.  எப்படியெனில் உடலில் கலோரிகள் ஆற்றலுக்காக எரிப்பதற்கு பதிலாக கொழுப்பாக மாறத் தொடங்கும். அதுபோல பசியைத் தூண்டும் ஹார்மோன் அளவு அதிகரிக்கும். இதனால் அதிகமாக சாப்பிட வாய்ப்பு உள்ளது.

35
இதய நோய்கள் அதிகரிக்கும்:

காலை உணவை தவிர்த்தால் இதை நோய் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும் என்று ஆய்வுகள் சொல்லுகின்றன.. காலை உணவை தவிர்ப்பதன் மூலம் உடலில் அதிக அளவு கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இதனால் இதை நோய் ஆபத்துக்கள் வரும். அதுபோல காலை உணவில் அதிக கொழுப்பு மற்றும் கலோரிகள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டாலும் இதை நோய் அதிகரிக்கும்.

இதையும் படிங்க:  காலையில் இதை ஃபாலோ பண்ணுங்க! நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கலாம்!

45
உடலில் ஆற்றல் குறையும்:

காலை உணவு தவிர்த்தால் நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றல் குறையும். உண்மையில் காலை உணவு தொடக்கத்திற்கு ரொம்பவே முக்கியம். ஏனெனில் காலை ஒரு உணவு தான் உடலுக்கு தேவையான ஆற்றலையும், ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. காலை உணவு தவிர்க்கும் போது நாள் முழுவதும் சோர்வாகவும், மந்தமாகவும், எந்த ஒரு விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் இருக்க செய்யும்.

இதையும் படிங்க:  காலையில் முட்டை சாப்பிட பிடிக்கலயா? புரதச்சத்தை வாரி வழங்கும் 4 உணவுகள் இதோ!! 

55
ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்:

காலை உணவு தவிர்ப்பதன் மற்றொரு பக்க விளைவு என்னவென்றால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடிற்க்கு  வழிவகுக்கும். அதாவது நம் உடல் சீராக செயல்பட தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ரொம்பவே முக்கியம். எனவே அவைகள் நிறைந்த காலை உணவு சாப்பிடுவதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதுவே காலை உணவை தவிர்ப்பதன் மூலம் உடலில் பல்வேறு முக்கிய ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும். நாளடைவில் நோய் எதிர்ப்பு சக்தி, எலும்பு ஆரோக்கியம், செரிமான பிரச்சனைகள் போன்ற அனைத்தும் பலவீனமடையும்.

 

Read more Photos on
click me!

Recommended Stories