வாக்கிங் போனாலே ரொம்ப மூச்சு வாங்குதா? அப்ப இதை உடனே கவனிங்க!! 

Published : Mar 17, 2025, 08:33 AM IST

நடைபயிற்சி செல்லும்போது அதிகம் மூச்சு வாங்கினால் என்ன காரணம் என்பதை இங்கு காணலாம். 

PREV
15
வாக்கிங் போனாலே ரொம்ப மூச்சு வாங்குதா? அப்ப இதை உடனே கவனிங்க!! 

Causes Of Heavy Breathing During Walking : நடைபயிற்சியின்போது சிலருக்கு சிறிது தூரத்திலேயே மூச்சு வாங்கும். கொஞ்ச தூரம் மெதுவாக நடந்தாலும், வேகமாக அதிக தூரம் நடந்தாலும் உடலில் இயக்கம் இருக்கும். இதனால் மூச்சுவிடும் வேகம் மாறுபடலாம்.  ஆனால் நடைபயிற்சி செய்யும்போது எப்போதும் மூச்சு வாங்கினால் அது உடலில் ஏதோ பிரச்சனை உள்ளதன் அறிகுறியாகும். உதாரணமாக, உடல் எடை,   ஆஸ்துமா ஆகிய காரணங்களால் கூட மூச்சு வாங்கலாம். இது தவிர ஒருவருக்கு இதய நோய், நுரையீரல் பலவீனம் போன்ற பிரச்னைகளைக் குறிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்தப் பதிவில் நடைபயிற்சியின் போது மூச்சு வாங்குவது ஏன் என காணலாம்.  

25

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது எல்லோருக்கும் ஒரே காரணங்களால் அல்லது ஒரே மாதிரியாக இருக்காது. மூச்சு விட சிரமமாக இருந்தால் போதிய ஆக்சிஜன் உடலுக்கு கிடைக்கவில்லை என அர்த்தம். 

இதையும் படிங்க:  வாக்கிங் சென்றே சுலபமா எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ்!! 

35
மூச்சு வாங்குவதன் பின்னணி:

உடற்பயிற்சி ஈடுபடும் போது தசைகளும் உடல் உறுப்புகளும் அதிகம் இயக்கம் பெறுகின்றன. அப்போது தசைகளுக்கும், உடல் உறுப்புகளுக்கும் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் இருந்து அதிகமான ஆக்சிஜன் தேவை இருக்கும். இதனால் இதயம் நிறைய ரத்தத்தை அனுப்பி வைக்கும். இதனால் இதய துடிப்பும் அதிகமாகிவிடும். இந்தக் காரணத்தால் தான் மூச்சு வாங்குகிறது.  உடற்செயல்பாடுகளில் ஈடுபடாமல் திடீரென  உடற்பயிற்சி செய்தாலும்  மூச்சு வாங்கும் வாய்ப்புள்ளது. தேவையில்லாத காரணங்களுக்காக நீங்கள் கவலையாக இருந்தாலும் அப்போது வேகமாக மூச்சு விட தொடங்குவீர்கள். சிலருக்கு இப்படித்தான் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த மாதிரி சூழ்நிலைகளில் உடற்பயிற்சி அல்லது யோகா செய்து மனதை ஒருங்கிணைக்க வேண்டும். 

45
நீரிழப்பு தவிர்க்க!

உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாவிட்டாலும் இது மாதிரி ஏற்படும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் உடலில் நீர் இழப்பு ஏற்படும்போது செல்களுக்கு போதுமான ஆற்றல் இல்லாமல் போய்விடும். இதனால் மூச்சு வாங்குவோம். வெயியில்  சென்று கொண்டிருக்கும் போது சிலர் திடீரென மயங்கி விழவும் இதுவே காரணம்.  அவர்களுக்கு முகத்தில் தண்ணீர் தெளித்து குடிக்கவும் கொடுக்க தண்ணீர் கொடுப்பார்கள்.  இது அவர்களுடைய நீர் இழப்பை சரி செய்வதற்காக தான். 

இதையும் படிங்க:  வாக்கிங் போறப்ப இந்த '1' விஷயம் மட்டும் சரியா பண்ணா போதும்!! ஆய்வில் தகவல்

55
உடனே கவனிக்க!

இது தவிர ஒருவருக்கு நடக்கும்போது அதிகமாக மூச்சு வாங்குவதற்கு காரணம் நுரையீரல் அல்லது இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பாக இருக்கலாம். ஒருவேளை நுரையீரல் அல்லது இதயம் பலவீனமாக இருந்தால் அவர்களுக்கு அதிகமான ஆக்சிஜனை கொண்டு செல்லும் திறன் இருக்காது. இதனால் அதிகமாக மூச்சு வாங்கும் வாய்ப்புள்ளது. நுரையீரலில் ரத்தக்கசிவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு ஆகிய அறிகுறிகளை இதை வைத்து கண்டறியலாம். உங்களுக்கு எப்போது நடந்தாலும் அதிகமாக மூச்சு வாங்குகிறது என்றால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

Read more Photos on
click me!

Recommended Stories