சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் மோர் குடிங்க.. எண்ண முடியாத அளவுக்கு நன்மைகள்!!

Published : Feb 08, 2025, 11:15 AM IST

Buttermilk Health Benefits : தினமும் உணவுக்கு பிறகு ஒரு கிளாஸ் மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கியம் நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.

PREV
15
சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் மோர் குடிங்க.. எண்ண முடியாத அளவுக்கு நன்மைகள்!!
சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் மோர் குடிங்க.. எண்ண முடியாத அளவுக்கு நன்மைகள்!!

குளிர்காலத்திற்கு விடை கொடுத்து கோடை காலத்திற்குள் கொஞ்சம் கொஞ்சமாக நுழையவுள்ளோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எனவே சாப்பிடுவதை விட, குளிர்ச்சியான மற்றும் ஆரோக்கியமான பானங்களை குடிப்பதை தான் நாம் அதிகம் விரும்புகிறோம். அதுவும் ஒரு கிளாஸ் மோர் அது சாதாரணமாக இருந்தாலும் சரி, காரமாக இருந்தாலும் சரி உங்களது நாளை சிறப்பாக்கிவிடும். கோடைகாலத்தில் நம்முடைய வயிற்றுக்கு ஒரு சிறந்த பானமாக அமைகிறது. மதிய உணவிற்கு பிறகு இதை குடிப்பதன் மூலம் செரிமானம் மேம்படும் மற்றும் அமிலத்தன்மை தடுக்கப்படும். இந்த அற்புதமான பானம் வெண்ணெய் தயாரிக்கும் செயல்முறையின் போது அதிலிருந்து பெறப்படுகிறது. இதில் புரோபயாடிக் பண்புகள் நிறைந்துள்ளன. மற்றும் கோடை வெப்பநிலை அதிகரிக்கும் போது உங்களது குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இது உதவுகிறது.

25
உணவுக்குப் பிறகு மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

சிறந்த பானமாக இருந்தாலும் அதன் நன்மைகளை நீங்கள் மேம்படுத்து விரும்பினால் அதில் வறுத்த சீரகம், உப்பு, ஒரு துண்டு இஞ்சி மற்றும் கொத்தமல்லி இலை போட்டு குடிக்கவும். குடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக மோர் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மோரில் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் பி12, லாக்டிக் அமிலம் போன்றவை உள்ளன. இதில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் கலோரிகள் குறைவாக உள்ளதால் எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், உணவுக்குப் பிறகு ஒரு கிளாஸ் மோர் குடிப்பதால் கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

35
செரிமானத்தை மேம்படுத்தும்:

செரிமான அமைப்புக்கு ஒரு வரப் பிரசாதம் ஆகும். மோரில் உள்ள ஆரோக்கியமான பண்புகள் மற்றும் லாக்டிக் அமிலம் செரிமானத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், உடலில் வளர்ச்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தும். எனவே தினமும் சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் மோர் குடியுங்கள். ரொம்பவே நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்:

வலுவான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற உணவுக்கு பிறகு தினமும் ஒரு கிளாஸ் மோர் குடிங்கள். இதனால் குடல் மற்றும் வயிறு ஆரோக்கியமாக இருக்கும். உணவும் எளிதாக ஜீரணித்து, ஆற்றலாக மாறும்.

இதையும் படிங்க:  தயிர் Vs மோர்: உடல் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது? தெரிஞ்சுக்க இதை படிங்க!

45
அமில தன்மையை தடுக்கும்:

சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் மோர் குடித்தால் அமிலத்தன்மையை எதிர்த்து போராடும். இதனுடன் இஞ்சி மற்றும் மிளகு சேர்த்து குடிப்பதன் மூலம் அதன் பண்புகள் மேலும் மேம்படும். மேலும் அஜீரணம் அல்லது அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

வயிறு எரிச்சல் உணர்வை குறைக்கும்:

மோர் உடலில் குறிப்பாக செரிமான அமைப்பில் குளிர்ச்சியான விளைவை ஏற்படுத்தும். அமில வீச்சு காரணமாக வயிற்றில் ஏற்படும் எரியும் உணர்வை இது குறைக்க உதவுகிறது.

இதையும் படிங்க:  முடியை அடர்த்தியாக வளர வைக்கும் மோர்!! 'இப்படி'  குடிப்பதுவே ஆரோக்கியம்!!  

55
சருமத்திற்கு நல்லது:

தர்மத்தின் நீர் ஏற்றமாக வைப்பது இது முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் உணவுக்கு பிறகு மோர் குடித்து வந்தால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். இதனால் சருமத்தில் எரிச்சல் உணர்வு தணிக்கப்படும்.

எடை இழப்புக்கு உதவுகிறது:

மோரில் இருக்கும் புரதச்சத்து வயிறு நீண்ட நேரம் நிரம்பி வைக்கும். மேலும் இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடை இழப்புக்கு உதவுகிறது.

எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது :

ஒரு இரும்பு சத்து அதிகமாக இருப்பதால், இது உங்களது எலும்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories