தினமும் அவகேடோ சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், ஏனென்றால் அவகேடோ ஏராளமான சத்துக்கள் நிறைந்த பழம் . சரிவிகித உணவின் ஒரு பகுதியாக அவகேடோவை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், உடலுக்குத் தேவையான சத்துக்களை அளித்து நீண்டகால ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. வைட்டமின் சி, ஈ, கே, பி வைட்டமின்கள், பொட்டாசியம், மெக்னீசியம், ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அவகேடோவில் நிறைந்துள்ளன. அவகேடோ போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
29
கொலஸ்ட்ராலைக் குறைக்கும்
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது செய்யும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், குறிப்பாக ஒலிக் அமிலம் அவகேடோவில் உள்ளது. இந்தக் கொழுப்புகள் எல்டிஎல் (கெட்ட) கொழுப்பின் அளவைக் குறைக்கவும், எச்டிஎல் (நல்ல) கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் உதவுகின்றன.
39
உடல் எடையைக் குறைக்கும்
அவகேடோ உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும். அவகேடோவில் உள்ள அதிக நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்துகிறது. உணவில் அவகேடோ சேர்ப்பது ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது.
அவகேடோ செரிமான ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. அவகேடோவில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது நன்மை செய்யும் குடல் பாக்டீரியாக்களை வளர்க்கிறது. ஆரோக்கியமான குடல் மைக்ரோபயோமையும் ஒட்டுமொத்த செரிமானத்தையும் ஆதரிக்கிறது.
59
கண்களைப் பாதுகாக்கும்
கண் ஆரோக்கியத்திற்கு அவசியமான இரண்டு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் லுடீன், சியாக்சாந்தின் ஆகியவை அவகேடோவில் உள்ளன. இந்த சேர்மங்கள் தீங்கு விளைவிக்கும் நீல ஒளியை வடிகட்டி, விழித்திரையில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, வயது தொடர்பான மாகுலர் சிதைவு, கண்புரை ஆகியவற்றிலிருந்து கண்களைப் பாதுகாக்க உதவுகின்றன.
69
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்
அவகேடோவில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளும் கரையக்கூடிய நார்ச்சத்தும் இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவும்.
79
சருமத்தைப் பாதுகாக்கும்
அவகேடோவில் உள்ள வைட்டமின்களும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் ஆரோக்கியமான, பொலிவான சருமத்திற்கு உதவுகின்றன. வைட்டமின் ஈ சருமத்தை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கிறது மற்றும் முன்கூட்டிய வயதான அறிகுறிகள் மற்றும் சுருக்கங்களைத் தடுக்க உதவுகிறது. அவகேடோவில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் சருமத்தை உள்ளிருந்து ஊட்டமளித்து ஈரப்பதமாக வைக்கின்றன.
89
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
வைட்டமின் ஈ, பாலிபினால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உட்பட பல்வேறு பைட்டோ கெமிக்கல்கள் அவகேடோவில் உள்ளன. இவை வீக்கத்திற்கு எதிரான பண்புகளைக் கொண்டுள்ளன. அவகேடோவை தொடர்ந்து சாப்பிடுவது உடலில் வீக்கத்தைக் குறைக்கவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
99
நினைவாற்றலை அதிகரிக்கும்
அவகேடோவை தொடர்ந்து சாப்பிடுவது நினைவாற்றல், கவனம், ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியம் ஆகியவற்றைப் பராமரிக்க உதவும்.