முட்டை என்பது குறைவான விலையில் கிடைக்கும் ஒரு சிறந்த புரத ஆதாரமாகும். பலரும் முட்டைகளை விரும்பி உண்பதில்லை. அவர்களுக்காக சுவையாகவும், அதே சமயம் கலோரிகள் குறைவாகவும் உள்ள 5 ரெசிபிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது. இது ஒரு நாள் முழுவதும் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. ஆனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்பவர்கள் அவசரத்தில் காலை உணவை தவிர்த்து விடுகின்றனர். இது மிகவும் தவறான முறையாகும். குறைவான செலவில் குறைந்த கலோரியில் தயாரிக்க கூடிய சில முட்டை ரெசிபிகளை இந்த பதிவில் காணலாம். இவை 200 கலோரிக்கும் கீழ் இருப்பதால் ஜிம்முக்கு செல்பவர்கள் கூட இந்த உணவுகளை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த உணவு வகைகளை எப்படி தயாரிப்பது என்பது குறித்து தற்போது காணலாம்.
26
சீஸ் & எக் ஸ்டஃப்டு பெல் பெப்பர்
காட்டேஜ் சீஸ் மற்றும் முட்டை ஸ்டஃப்டு பெல் பெப்பர்ஸ் ஒரு சுவையான மற்றும் நிறைவான காலை உணவாகும். ஒரு குடைமிளகாயை எடுத்து பாதியாக வெட்டி கொள்ள வேண்டும். இதை ஒரு தோசைக் கல்லில் இட்டு இரு பக்கமும் நன்றாக வேக விட வேண்டும். இதனுள் சிறிதளவு சீஸ் தூவி, அதன்மேல் ஒரு முட்டையை ஆஃபாயில் போல உடைத்து ஊற்றி உப்பு தூவ வேண்டும். இந்த உணவானது வயிறு நிரம்பிய உணர்வை தருவதோடு, ஆரோக்கியம் நிறைந்ததாகும். குறைந்த கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாக ஸ்டஃப்டு பெல் பெப்பர்ஸ் விளங்குகின்றன. இதன் மேல் சிறிது கொத்தமல்லி இலைகள், தூளாக்கப்பட்ட மிளகாய் (Chilli Flakes) மற்றும் ஆரிகெனோ (Oregano) தூவி சாப்பிட்டால் சுவை அபாரமானதாக இருக்கும்.
36
காட்டி ரோல்
காட்டி ரோல் என்பது ஷவர்மாவை போன்ற ஒரு உணவாகும். ஆனால் ஷவர்மாவில் மைதா மாவு கொண்ட குபூஸ் பயன்படுத்துவார்கள். காட்டி ரோலில் சப்பாத்தியை பயன்படுத்த வேண்டும். முதலில் தோசைக் கல்லில் சப்பாத்தியை சுட வேண்டும். சப்பாத்தியின் மேற்புறத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதை நன்றாக பரப்பி, இருபுறமும் வேகும்படி சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் நடுவில் நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ், குடைமிளகாய், வறுத்த பன்னீர் அல்லது வறுத்த சிக்கன் அல்லது வறுத்த மாட்டு இறைச்சி ஆகியவற்றையும் வைத்து கொள்ளலாம். தேவைப்படுபவர்கள் முட்டை கலக்காத மயோனிஸ் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் இதை ரோல் போல செய்து சாப்பிடலாம். இது சுவையான, கலோரி குறைவான, ஆரோக்கியமான உணவாகும்.
எக் ஸ்கிராம்பிள் செய்வதற்கு இரண்டு பெரிய முட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய தக்காளி, குடைமிளகாய், வெங்காயம், முட்டைக்கோஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் ஒரு வாணலியில் முட்டைக் கலவையை ஊற்றி அதை முட்டை பொடிமாஸ் போல நன்றாக கிளற வேண்டும். இதில் உள்ள கலோரிகள் 190 மட்டுமே. இதை ரூ.40 செலவில் செய்து விடலாம். இதனுடன் சிறிது சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் ஆரிகேனோ தூவி சாப்பிடலாம்.
56
மஸ்ரூம் எக் ஒயிட் ஆம்லெட்
இந்த உணவை செய்வதற்கு முதலில் காளான்களை வாங்கி அதை சுத்தம் செய்து உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இந்த கலவையுடன் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து நன்றாக கலக்கி ஆம்லேட் போல தோசைக் கல்லில் ஊற்றவும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்க்கவும். இறக்கிய பின்னர் அதன் மேல் சிறிதளவு சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் ஆரிகேனோ தூவி சாப்பிடலாம். இது ஆரோக்கியமான, அதே சமயம் குறைவான கலோரிகளைக் கொண்ட ஒரு முட்டை உணவாகும்.
66
அவகேடோ முட்டை கப்
அவகேடோ முட்டை கப்பானது கிரீமியாக இருக்கும் அவகேடோவை வேகவைத்த முட்டை உடன் இணைக்கின்றன. சரிபாதியாக வெட்டப்பட்ட அவகேடோவில் சிறிது சதையை நீக்கிவிட வேண்டும். ஒவ்வொரு பாதியிலும் முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும். இதை 375 டிகிரி ஃபாரன்ஹீட் (190 டிகிரி செல்சியஸ்) வெப்ப நிலையில் 12 முதல் 15 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்தால் சுவையான அவகேடோ முட்டை கப் ரெடி.