உடல் எடையை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் அற்புத டீ... வெறும் வயிற்றில் இப்படி குடித்து பாருங்கள்!!

First Published | Jan 24, 2023, 10:44 AM IST

Health benefits of jaggery tea: குளிர்காலத்தில் பதப்படுத்தப்பட்ட சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்து இஞ்சி டீ குடித்து வந்தால், எளிதில் உடல் எடை குறைவது மட்டுமின்றி, பல உடல்நல பிரச்சனைகளும் குறையும்.  

குளிர்காலத்தில் காய்ச்சல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பல நோய்கள் வருகின்றன. இந்த பிரச்சனைகளை குறைக்க வெல்லம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குளிர்ந்த காலநிலையில் கூட அவை நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. வெல்லத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றன. வைட்டமின்கள், துத்தநாகம், தாமிரம், கால்சியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளது. 

வீட்டில் நாம் பயன்படுத்தும் பதப்படுத்தப்பட்ட சர்க்கரை பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதனை உண்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தவிர மற்ற பிரச்சனைகளும் ஏற்படும். அதற்கு பதிலாக வெல்லத்தை எடுத்துக்கொள்வது நல்லது. சர்க்கரையை விட வெல்லம் ஆரோக்கியமானது. தீங்கு செய்யாது. எனவே இதை உங்கள் தேநீர் அல்லது நீங்கள் குடிக்கும் வேறு எந்த உணவிலும் சேர்க்கவும். உங்களுக்கு தெரியுமா.. காலையில் இஞ்சி டீயுடன் வெல்லம் சேர்த்து குடிப்பதால் பல உடல்நல பிரச்சனைகளை குறைக்கலாம். 

Tap to resize

நம் உடலில் சேரும் தேவையில்லா நச்சுகள் தீங்கு விளைவிக்கும். குறிப்பாக இவை நீண்ட நேரம் உடலில் இருந்தால் பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே இவற்றை உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். காலையில் ஒரு கப் வெல்லம் கலந்த டீ குடிப்பதால் ரத்தத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறும். இது கல்லீரலுக்கு சிறந்த சுத்தப்படுத்தியாகவும் உள்ளது. இதனால் தேவையற்ற நோய்களில் இருந்து நம் உடலை பாதுகாக்க முடியும். இந்த வெல்லம் டீயை தொடர்ந்து அருந்தி வந்தால், உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். அசிடிட்டி, செரிமான கோளாறு, மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகளை நீக்குகிறது. இந்த தேநீர் நமது குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. 

உடல் எடையை குறைக்க கடுமையான டயட்டைப் பின்பற்றுபவர்கள் வெல்லம் கலந்த இஞ்சி டீயை அருந்தலாம். இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் சேரும் தேவையில்லாத கலோரிகள் கரையும். இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி6, துத்தநாகம், பொட்டாசியம், பல முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே இது நமது செரிமான அமைப்புக்கு மிகவும் நல்லது. இது நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரமாகவும் உள்ளது. இது நம் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்க உதவுகிறது. பசியைக் குறைக்கிறது. இது நமது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், நமது ஆற்றல் அளவை இரட்டிப்பாக்கவும் உதவுகிறது. அதிகாலையில் ஒரு கப் வெல்லம் கலந்த தேநீர் குடித்துவிட்டு உடற்பயிற்சி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

குளிர்காலத்தில் நம்மில் பலருக்கு இருமல், சளி பிரச்சனை வரும். வெல்லம் கலந்த தேநீர் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பருவகால காய்ச்சலில் இருந்து உடலையும் பாதுகாக்கிறது. இதில் வைட்டமின்கள், தாதுக்கள் இருப்பதால், உடலில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும், எதிர்ப்பை உருவாக்கவும் உதவுகிறது. இது உடலை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது. 

இதையும் படிங்க: முட்டையை இப்படி சாப்பிட்டால் விஷத்திற்கு சமம்... எச்சரிக்கும் நிபுணர்கள் 

இதையும் படிங்க: தலையில் பொடுகு தொல்லையா? முற்றிலும் ஒழித்து கட்ட இந்த ஒரு பொருளை பயன்படுத்துங்கள் போதும்..

Latest Videos

click me!