சைனஸ் தொற்று என்பது பலரையும் அவதிக்குள்ளாக்கும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்னை. ஒவ்வாமை, சளி மற்றும் மூக்கை தூய்மையாக வைப்பதுடன், சில எளிய அன்றாடப் பழக்கவழக்கங்கள் மூலமே இந்த பாதிப்பு வராமல் நாம் தடுக்க முடியும். அதற்கான எளிய வழிகள் இதோ:
நம் கைகளின் மூலமாகத்தான் பல வைரஸ் கிருமிகள் உடலுக்குள் பரவுகின்றன. எனவே, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது ஹேண்ட்வாஷ் கொண்டு சுத்தமாகக் கழுவுங்கள். இது தொற்று நோய்கள் நம்மைத் தாக்காமல் பாதுகாக்கும்.
27
போதிய அளவு தண்ணீர் குடியுங்கள்:
உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால், மூக்கில் உள்ள சளி (Mucus) கெட்டியாகாமல் தளர்ந்து, எளிதாக வெளியேறிவிடும். இதனால் மூக்கடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.
37
நாசி ஸ்ப்ரே பயன்படுத்துங்கள்:
உப்பு நீர் கலந்த நாசி ஸ்ப்ரேக்களைப் பயன்படுத்தி மூக்கின் உட்பகுதியைச் சுத்தம் செய்யலாம். இது மூக்கிற்குள் தங்கியிருக்கும் தூசிகள், அலர்ஜியை ஏற்படுத்தும் துகள்கள் மற்றும் கெட்டியான சளியை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது.
உங்களுக்குக் தூசி அல்லது பருவகால மாற்றங்களால் அலர்ஜி ஏற்படும் பட்சத்தில், ஆரம்பத்திலேயே அதற்கான சிகிச்சையையோ அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையோ மேற்கொள்ளுங்கள். அலர்ஜியைக் கட்டுப்படுத்தினால் சைனஸ் வீக்கம் மற்றும் அடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
57
புகைப்பிடிப்பதைத் தவிருங்கள்:
சிகரெட் புகை மற்றும் வேப்பிங் (Vaping) போன்ற பழக்கங்கள் மூக்கின் உட்புறச் சதைகளை எரிச்சலடையச் செய்யும். எனவே, புகைப்பிடிக்கும் பழக்கத்தைத் தவிர்ப்பதுடன், பிறர் புகைப்பிடிக்கும் போது வரும் புகையை சுவாசிப்பதிலிருந்தும் விலகியிருப்பது நல்லது.
67
ஹியூமிடிஃபையர் (Humidifier) பயன்படுத்துங்கள்:
நாம் இருக்கும் அறையின் காற்று மிகவும் வறட்சியாக இருந்தால், அது மூக்கின் உட்பகுதியைப் பாதிக்கும். அறையிலுள்ள காற்றில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க 'ஹியூமிடிஃபையர்' கருவியைப் பயன்படுத்தலாம். இது வறண்ட காற்றினால் ஏற்படும் மூக்கு எரிச்சலைத் தடுக்கும்.
77
ஆழ்ந்த உறக்கம் அவசியம்:
உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி சீராக இருக்க தூக்கம் மிகவும் இன்றியமையாதது. தினமும் 7 முதல் 9 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் கொள்வது, உடலுக்குத் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் ஆற்றலைத் தரும்.