நீண்ட ஆயுள் என்பது ஏதோ ஒரு மேஜிக் மாத்திரையில் இல்லை, நாம் தினமும் செய்யும் இந்த சின்ன சின்ன மாற்றங்களில் தான் இருக்கிறது. சில ஆரோக்கிய முறைகளை தினமும் பின்பற்றி வந்தாலே நம்முடைய வாழ்நாள் அதிகரிக்கும்.
தட்டு நிறைய சாப்பாடு, மூச்சு முட்ட உண்ணும் வழக்கம் இருக்கிறதா? அதை முதலில் மாற்றுங்கள். ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் 'ஹரா ஹசி பு' (Hara Hachi Bu). அதாவது, வயிறு 80% நிறையும் போதே சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். மீதி 20% காற்றும் தண்ணீரும் உங்கள் செரிமானத்தை எளிதாக்கி, உடலின் முதுமையைத் தடுத்து நிறுத்தும்!
25
காலையில் போன் பார்க்காதீங்க:
காலையில் கண் விழித்ததும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் பார்ப்பது உங்கள் மூளையை காலையிலேயே சோர்வடையச் செய்கிறது. இது மன அழுத்த ஹார்மோனான கார்டிசாலை (Cortisol) அதிகரிக்கிறது.எழுந்த முதல் 30 நிமிடங்கள் எந்தத் திரையையும் பார்க்காதீர்கள். வெறும் தரையில் வெறும் காலுடன் 5 நிமிடம் நடங்கள். பூமியின் ஆற்றல் உங்கள் நரம்புகளைப் புதுப்பிக்கும்!
35
மதிய சாப்பாட்டுக்கு பின் 'குட்டித் தூக்கம்:
மதிய உணவுக்குப் பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் குட்டித் தூக்கம் போடுவது சோம்பேறித்தனம் அல்ல; அது ஒரு வரப்பிரசாதம். இது இதய நோய்கள் வரும் வாய்ப்பை 37% குறைப்பதாகப் புதிய ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் கவனிங்க, தூக்கம் 20 நிமிடங்களுக்கு மேல் தாண்டக் கூடாது. அது உங்களை மந்தமாக்கிவிடும். ஜஸ்ட் ஒரு 'ரீசார்ஜ்' தான்!
உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை உணவின் சுவையை கூட்டலாம், ஆனால் ஆயுளைக் குறைக்கும். வாரத்தில் ஒரே ஒரு நாள் மட்டும் உப்பு மற்றும் சர்க்கரை இல்லாத உணவுகளை (பழங்கள், வேக வைத்த காய்கறிகள்) சாப்பிட்டுப் பாருங்கள். உங்கள் உடலின் உள்ளுறுப்புகளுக்கு நீங்கள் தரும் 'வாரம் ஒரு நாள் லீவு' இது. இது உடலின் நச்சுக்களை வெளியேற்றி, உங்களை என்றும் இளமையாக வைக்கும்.
55
மனசு விட்டு' பேசுங்கள், சிரிங்க:
நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை விட, யாருடன் வாழ்கிறோம் என்பது முக்கியம். வாரத்தில் ஒரு நாளாவது பழைய நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தினருடனோ எந்த எலக்ட்ரானிக் கேட்ஜெட்டும் இல்லாமல் மனம் விட்டுப் பேசுங்கள், சத்தமாகச் சிரியுங்கள். மகிழ்ச்சியான சமூக உறவுகள் உங்கள் ஆயுளை 5 முதல் 7 ஆண்டுகள் வரை நீட்டிக்கும் ஆற்றல் கொண்டவை.