Heart Attack: மாரடைப்பு (Myocardial Infarction) என்பது இதயத்துக்குப் போகும் ரத்த ஓட்டம் திடீரென தடைபடுவதால் ஏற்படுகிறது. இதனால் இதயத் தசைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல், திசுக்கள் சேதமடைகின்றன.
மாரடைப்பு (Heart Attack) என்பது இதயத்தின் ஒரு பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டம் திடீரெனத் தடைபடும்போது ஏற்படுகிறது. இதயம் சரியாகச் செயல்பட அதற்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும்போது இதய தசைகள் பாதிக்கப்படத் தொடங்குகின்றன. இதயத்துக்கு ரத்தம் கொண்டு செல்லும் தமனிகளில் கொழுப்பு படிந்து, ரத்த ஓட்டம் தடைபடுவதால் இது நிகழ்கிறது.
29
இளைஞர்களுக்கு வரும் மாரடைப்பு
மணி கணக்கில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்வது, உடற்பயிற்சி இல்லாதது, வாகனங்களை அதிகம் சார்ந்திருப்பது போன்றவை இதய நோய் அபாயத்தை அதிகரிக்கின்றன. நாம் முன்னோர் காலக்கட்டத்தில் நடுத்தர வயதினருக்கும் முதியவர்களுக்கும் வந்த சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இன்று இளைஞர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. இவை இரண்டுமே மாரடைப்புக்கான முக்கிய காரணிகள் என்கிறார்கள் மருத்துவர்கள்.
39
காரணமில்லாத சோர்வு
அசாதாரணமான சோர்வுதான் முதல் அறிகுறி. இது இதய நோயின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளில் ஒன்று. இதயம் திறமையாக ரத்தத்தை பம்ப் செய்ய முடியாதபோது, உடல் தொடர்ந்து பலவீனமாகவும் சோர்வாகவும் உணரலாம்.
நெஞ்சில் அழுத்தம் அல்லது வலி மற்றொரு அறிகுறி. நெஞ்சில் பாரமாக இருப்பது, இறுக்கமாக உணர்வது அல்லது அசௌகரியம் போன்றவை மாரடைப்புடன் தொடர்புடைய பொதுவான அறிகுறிகளாகும்.
59
கொஞ்ச தூரம் நடந்தால் மூச்சு வாங்குதா?
மூச்சுத்திணறலும் மாரடைப்பின் ஒரு அறிகுறிதான். கொஞ்ச தூரம் நடந்தாலோ அல்லது வழக்கமான வேலைகளைச் செய்தாலோ மூச்சு வாங்குவது, இதயம் சரியாகச் செயல்படவில்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
69
அதிக வியர்வை வெளியேறினால் உஷார்
திடீரென அதிக வியர்ப்பது மற்றொரு அறிகுறியாகும். குளிரான சூழலில் ஓய்வெடுக்கும்போது கூட, எந்த காரணமும் இல்லாமல் ஜில்லென்று வியர்த்தால், அது இதயப் பிரச்சனைக்கான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். இதயப் பிரச்சனை உள்ளவர்கள் இப்படி திடீரென வியர்ப்பதாக அடிக்கடி கூறுகின்றனர்.
79
இதயம் வேகமாகத் துடித்தால் ஆபத்து
வேகமான அல்லது ஒழுங்கற்ற இதயத்துடிப்பு மற்றொரு அறிகுறியாகும். திடீரென இதயம் வேகமாகத் துடிப்பது அல்லது அதன் துடிப்பு ஒழுங்கற்று இருப்பதை உணர்ந்தால், அதை அலட்சியப்படுத்த வேண்டாம். இதயத் துடிப்பில் ஏற்படும் இந்த மாற்றங்கள் அடிக்கடி நிகழ்ந்தால், மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.
89
கேஸ், அசிடிட்டி என நினைக்க வேண்டாம்
கேஸ் அல்லது அசிடிட்டி அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். அஜீரணம், அசிடிட்டி, கேஸ் அல்லது பொதுவான பலவீனம் என நீங்கள் நினைப்பது, உண்மையில் மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.
99
இந்த பிரச்சனை இருந்தால் பரிசோதனை அவசியம்
நெஞ்சில் ஒருமாதிரி அசௌகரியம், மூச்சுத்திணறல், அல்லது கேஸ் பிரச்சனை மாதிரி இருந்தால், அதை சாதாரணமாக நினைக்காதீர்கள். இந்த அறிகுறிகள் தெரிந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ECG அல்லது எக்கோ கார்டியோகிராம் போன்ற இதயப் பரிசோதனைகளைச் செய்வது அவசியம். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால், உயிருக்கு ஆபத்தான சிக்கல்களைத் தவிர்க்கலாம்.