சுவைக்காக இல்ல சத்துக்காக!! தக்காளி கூட இந்த '4' காய்கள் சேர்க்கக் கூடாது..

Published : Feb 06, 2025, 12:56 PM IST

Cooking Mistakes : தக்காளி நல்லது என்றாலும், சில காய்கறிகளுடன் அதை சேர்த்து சமைக்க கூடாது. அது எந்தெந்த காய்கறிகள் என்று இங்கு பார்க்கலாம்.

PREV
15
சுவைக்காக இல்ல சத்துக்காக!! தக்காளி கூட இந்த '4' காய்கள் சேர்க்கக் கூடாது..
சுவைக்காக இல்ல சத்துக்காக!! தக்காளி கூட இந்த '4' காய்கள் சேர்க்கக் கூடாது..

தக்காளி சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய காய்கறிகளில் ஒன்றாகும். இது உணவின் சுவையை கூட்டுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இது தவிர சரும பராமரிப்புக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. சூப்கள், சாலடுகல் மற்றும் பிற உணவுகளில் தக்காளி பயன்படுத்தப்படுகிறது. மற்ற காய்கறி உணவுகளுடனும் தக்காளியை சேர்க்கும் போது அது அந்த உணவின் சுவையை அதிகரிக்க உதவுகிறது. ஆக மொத்தத்தில் எல்லா சமையல் குறிப்புகளிலும் தக்காளி தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சில காய்கறிகளை சமைக்கும் போது அதனுடன் தக்காளி சேர்க்கக்கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த காய்கறிகளுடன் தக்காளியை சேர்த்து சமைத்தால் அது அந்த காய்கறிகளின் உணவை கெடுத்துவிடும். அப்படி எந்தெந்த காய்கறிகளை சமைக்கும் போது அதில் தக்காளி சேர்க்கக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

25
பாகற்காய்:

பாகற்காயில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே இதனுடன் தக்காளி ஒருபோதும் சேர்க்கக்கூடாது. முதல் காரணம், பாகற்காய் சமைக்கும்போது அதனுடன் தக்காளி சேர்த்தால் பாகற்காய் சரியாக வேகாது. இரண்டாவது பாகையுடன் தக்காளி சேர்க்கும்போது ஒட்டும் தன்மையுடையதாகிவிடும் மேலும் சாப்பிடும் போது சுவை நன்றாகவே. எனவே பாகற்காய் சமைக்கும் போது இனி தக்காளி சேர்க்காதீர்கள்.

இதையும் படிங்க:  தக்காளியை அதிகமா எடுத்துக்காதீங்க; இல்லனா இந்த பிரச்சனைகள் வரும்!!

35
வெண்டைக்காய்:

வெண்டைக்காய் சமைக்கும் போது அதில் தக்காளி ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் முதலில் வெண்டைக்காய் ஒட்டும் தன்மை உடையது அதனுடன் தக்காளி சேர்த்தால் அது இன்னும் அதிகமாக ஒட்டிக் கொள்ளும். இரண்டாவதாக தக்காளியில் புளிப்பு தன்மை உடையதால், அது வெண்டைக்காயின் சுவையை மோசமாக்கிவிடும். மேலும் வெண்டைக்காயுடன் தக்காளி சேர்த்து சமைத்தால் அது நல்ல மணத்தையும், சுமையையும் தரவே தராது.

இதையும் படிங்க:  தக்காளியில் இந்த இரண்டு பொருள் மட்டும் கலந்தால் போதும்; நொடியில் முகம் பளபளக்கும்..!!

45
பூசணிக்காய்:

பூசணிக்காய் சற்று இனிப்பு மற்றும் புளிப்பு தன்மை உடையதால், இதனுடன் தக்காளி சேர்த்து சமைத்தால், அது அதன் சுவையை மோசமாக்கிவிடும். ஏனெனில் தக்காளி இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டதால் அது பூசணியின் சுவையை கெடுப்பது மட்டுமல்லாமல், அது நறுமணத்தையும் கொடுத்துவிடும்.

55
கீரைகள்:

கீரைகள் குளிர்காலம் மற்றும் கோடை காலங்களிலும் கிடைக்கும். கீரையை சமைக்கும் போது இதனுடன் தக்காளி ஒருபோதும் சேர்க்கவே வேண்டாம். அப்படி சேர்த்தால் தக்காளி கீரையின் சுவையை கெடுத்து விடும். அதுமட்டுமின்றி கீரை சமைக்கும் போது அது இயற்கையாகவே நிறைய தண்ணீரை வெளியிடும். அத்தகைய சூழ்நிலையில், அதனுடன் தக்காளி சேர்த்தால் அதிக நீர்ச்சத்தாகிவிடும். இதனால் உணவின் சுவை கெட்டுவிடும் மொத்ததில் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்காது.

Read more Photos on
click me!

Recommended Stories