
பீட்ரூட் ஒரு வேர் காய்கறியாகும். பீட்ரூட் உணவில் பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதனால் தான் பலர் இதில் ஜூஸ் , அல்வா அல்லது ஸ்மூத்தி செய்து சாப்பிடுகிறார்கள். அதுவும் குறிப்பாக, பெரும்பாலானோர் தினமும் காலை பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை வழக்கமாக்கியுள்ளனர். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். பீட்ரூட் ஜூஸ் இரத்த சோகை பிரச்சினையை தடுப்பது முதல் சருமத்தை ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை உள்ளிட்ட பல நன்மைகளை நமக்கு வழங்குகிறது. அந்தவகையில், தினமும் காலை பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
உடலில் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக தான் ஹீமோகுளோபின் குறைய தொடங்கும். இதனால் ரத்த சோகை பிரச்சனை ஏற்படும். பீட்ரூட்டில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இது ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்க உதவும். இதில் இருக்கும் இரும்புச்சத்து ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும். இதனால் ரத்த சிவப்பணுக்கள் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும். எனவே ரத்த சோகைப் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலை ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது நல்லது.
கொழுப்பை குறைக்கும்:
பீட்ரூட்டில் இருக்கும் பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்க பெரிதும் உதவுகின்றது. உடலில் கெட்ட கொழுப்பு குறைவதன் மூலம் அடைபட்ட தமனிகளின் பிரச்சனை சரியாகும். இதனால் இதய நோய்களின் அபாயமும் குறையும். எனவே, தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதன் மூலம் இதய நோய்களின் அபாயத்தை குறைத்து விடலாம்.
உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு பீட்ரூட் ஜூஸ் ஒரு அருமருந்தாகும். ஆய்வுகளின் படி, தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். ஏனெனில் பீட்ரூட் ஜூஸில் அதிகளவு நைட்ரிக் ஆக்சைடு உள்ளது. இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
இதய ஆரோக்கிய மேம்படும்:
தினமும் காலை ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் இதை ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் இந்த ஜூஸில் இருக்கும் நைட்ரேட் இதய நோய்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதையும் படிங்க: உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டும் தரும் பீட்ரூட் ஜூஸ்... ஆனா 'இவங்க' குடிக்கவே கூடாது.. ஏன் தெரியுமா?
கல்லீரல் நம்முடைய உடலின் ஒரு முக்கியமான உறுப்பு என்பதால் இதை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் பீட்ரூட் ஜாஸ் குடிக்கவும். பீட்ரூட் ஜூஸ் கல்லீரலை ஆக்சிஜனேற்ற சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றது. மேலும் இது நச்சு நீக்கத்திற்கும் பெரிதும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்:
பீட்ரூட்டில் வைட்டமின் சி மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைக்க உதவுகிறது. இதனால் தொற்று நோய்கள் வராமல் வருவதை சுலபமாக தடுத்துவிடலாம். எனவே தினமும் காலை ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் தவறாமல் குடியுங்கள்.
இதையும் படிங்க: இவ்வளவு நன்மைகளா? இது தெரிந்தால் இனி பீட்ரூட் வேண்டாம்னு சொல்லமாட்டீங்க!
- பீட்ரூட்டில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளதால் இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கும்.
- பீட்ரூட் ஜூஸில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. கொழுப்பும் இல்லை எனவே இதை தினமும் குடித்து வந்தால் எடையை சுலபமாக குறைத்து விடலாம்.
- பீட்ரூட் ஜூஸில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
- சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் ரத்த சர்க்கரை அளவு குறையும்.