கொழுப்புகளை கட்டுப்படுத்தும் மீன்கள் என்னென்ன?

Published : Feb 05, 2025, 09:12 PM IST

கொலஸ்ட்ரால் என்பது நமது அனைத்து செல்களிலும் காணப்படுகிறது. சில மீன்களில் அதிக கொழுப்பு இருக்கும். சில மீன்களை சாப்பிட்டால் உடலில் இருக்கும் கொழுப்பை கட்டுப்படுத்தலாம். 

PREV
17
கொழுப்புகளை கட்டுப்படுத்தும் மீன்கள் என்னென்ன?
கொழுப்புகளை கட்டுப்படுத்தும் மீன்கள் என்னென்ன?

அதிகப்படியான கொழுப்பு அதிக ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இதன்காரணமாக மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். இதைத் தவிர்க்க, உடற்பயிற்சி மற்றும் இயற்கையாகவே குறைந்த கொழுப்பு உள்ளடக்கம் கொண்ட உணவுகளைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட சீரான உணவு மூலம் கொழுப்பின் அளவைக் குறைப்பது உடலுக்கு மிகவும் நல்லது. நமது அன்றாட உணவு முறையில், உடலில் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும் சில மீன்கள் தேர்ந்தெடுத்து உண்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கொழுப்புகளை கட்டுப்படுத்தும் மீன்கள் குறித்து பார்க்கலாம்

27
சூரை மீன்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக சூரை மீனில் காணப்படுகிறது. எல்டிஎல் கொழுப்பின் திரட்சியைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டது சூரைமீன்.

37
இறையன் மீன் (Trout Fish):

இறையன் மீன்  புரதம், நியாசின், வைட்டமின் பி12 மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும். மேலும் கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்றவற்றை கொண்டிருக்கிறது. டிரவுட் கலோரிகளில் குறைவாக இருக்கிறது, இவை 100 கிராம் மீனில் 149 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது. இது நல்ல கொழுப்பின் அளவை பராமரிக்க உதவுகிறது.

47
வெங்கணா மீன்

இந்த மீன் இரண்டு வகையான அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை வழங்குகிறது, EPA மற்றும் DHA. இது வீக்கத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. வெங்கணா மீன் வைட்டமின் டி யின் மூலமாகவும் உள்ளது.

57
கானாங்கெளுத்தி

கானாங்கெளுத்தி மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. கானாங்கெளுத்தி உலகளவில் உள்ள மக்களால் விரும்பி உட்கொள்ளப்படும் ஒரு முக்கியமான உணவு மீனாகும்.

67
வாள்மீன்

6. வாள்மீனில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

77
மத்தி மீன்

மத்தி மீன்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த மூலமாகும். இது கொழுப்பின் அளவைப் பராமரிக்க உதவுகிறது. மத்தி மீன்களில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் போன்ற முக்கிய தாதுக்கள் மற்றும் இரும்பு மற்றும் செலினியம் போன்ற சில சுவடு தாதுக்கள் அதிகமாக உள்ளன. இது இரத்த சர்க்கரை அளவை சிறிதளவு குறைக்கவும் உதவுகிறது. அவை வைட்டமின் டி, கால்சியம் மற்றும் புரதத்தின் நல்ல மூலமாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories