கர்ப்ப கால ஸ்ட்ரெச் மார்க்ஸ்: மறைக்க சூப்பர் வீட்டு வைத்தியம் இதோ!
பொதுவாக பிரசவத்திற்கு பிறகு ஸ்டெச் மார்க் (stretch mark) அல்லது பிரசவ தழும்பு வருவது பொதுவானது. பல பெண்கள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள். முக்கியமாக இந்த தழும்பானது அதிக எடையில் இருப்பவர்கள், வயிற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தையை சுமப்பவர்கள், வயிற்றில் உள்ள குழந்தைகள் எடை அதிகமாக இருந்தால், பனிக்குடம் நீர் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு ஆகியோருக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஒரு சில பெண்களுக்கு குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் தானாகவே மறந்துவிடும். ஆனால் ஒரு சிலருக்கோ அது மறையாத ஆகவே மாறிவிடும்.
26
stretch marks
நீங்க முடியாத கோடுகளை அகற்றுவது மிகவும் கடினம். இந்த நாள் சில பெண்கள் அதை அகற்ற அவர்கள் சிகிச்சைகள் அல்லது கிரீம்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவை பக்க விளைவுகளை தான் அதிகம் ஏற்படுத்தும் என்று பலர் உணர்வதில்லை எனவே அவற்றிற்கு பதிலாக சில பயன் உள்ள வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தலாம். இதனால் பிரசவத்திற்கு பிறகு ஏற்பட்ட ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் இருந்த இடம் கூட தெரியாமல் போய்விடும்.
36
கற்றாழை:
கற்றாழை குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இது தோல் திசுக்களை மீண்டும் உருவாக்க பெரிதும் உதவும். எனவே கர்ப்பகால ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் அகற்ற இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு கற்றாழை செல்லை நேரடியாக ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் இருக்கும் இடத்தில் தடவி மசாஜ் செய்து, சுமார் 20-30 நிமிடங்கள் அப்படியே காய வைக்கவும். பிறகு சூடான நீரில் அந்த கழுவி விடுங்கள். சிறந்த முடிவுகளைப் பெற தினமும் தவறாமல் இதை செய்யுங்கள்.
46
வெள்ளரி சாறு மற்றும் எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாறில் இருக்கும் அமிலத்தன்மை வடுகள் குணமடைய உதவுகிறது. அதுபோல வெள்ளரி சார் சருமத்தை புதிதாக வைக்க உதவும் எனவே இவை இரண்டையும் சம அளவு எடுத்து தழும்புகள் உள்ள தோலின் மீது தடவி சுமார் பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். அதன் பிறகு அந்த இடத்தில் தேங்காய் எண்ணெய் தடவி கொள்ளுங்கள்..
பிரசவகால தழும்புகளை மறைக்க பாதாம் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவும். இதற்கு இவை இரண்டையும் சம அளவு எடுத்து அதை தழும்புகள் உள்ள தோலின் மீது தடவி மசாஜ் செய்ய வேண்டும். இந்த இரண்டு எண்ணெயும் முற்றிலும் இயற்கையானது என்பதால் சருமத்திற்கு எந்தவித தீங்கும் விளைவிக்காது.
ஆமணக்கு எண்ணெய் பிரசவகால தழும்புகளை மறைக்க உதவும் மற்றும் சருமத்தை மென்மையாக மாற்றும். இதை நீங்கள் தழும்பின் மீது தடவி மசாஜ் செய்து வந்தால் விரைவிலேயே குணமடைந்து உங்களது சருமம் மென்மையாக மாறும். நல்ல முடிவுகளைப் பெற தினமும் இந்த வைத்தியத்தை செய்ய வேண்டும்