35- வயதுக்கு மேல் கருத்தரித்தால் என்னென்ன பிரச்சனைகள் வரலாம் தெரியுமா?
வயசு கூடக் கூட கருச்சிதைவு ஆபத்தும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் சொல்கின்றனர். 2019-ல் நடந்த ஒரு ஆய்வில், 25-29 வயசு உள்ளவங்கள விட 30-45 வயசு உள்ளவங்களுக்குத்தான் கருச்சிதைவு அதிகமாக இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். முழு விவரங்கள் பற்றி பார்க்கலாம்.

35 வயசுக்கு மேல் கர்ப்பம்:
எந்த வயசுல கர்ப்பமா இருந்தாலும், அது சவால்கள் நிறைஞ்ச காலகட்டம்தான். கர்ப்பம் தரிப்பதற்கு ரொம்ப பாதுகாப்பான வயசு 30 வரைக்கும் தான் சுகாதார நிபுணர்கள் சொல்கின்றனர். ஆனால், 35 வயசுக்கு மேல் போகப் போக ஆபத்துக்களும் அதிகரிக்கின்றன.
35 வயதுக்கு மேல் ஒரு பெண் கர்ப்பமாக இருந்தால், குழந்தைக்கு மட்டும் இல்ல, அம்மாவுக்கும் கூட ஆபத்து அதிகம். 35 வயசுக்கு அப்புறம் கர்ப்பமாக இருந்தால் என்னென்ன பிரச்சினைகள் வரும்னு இப்ப பாக்கலாம்.
கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புள்ளது:
ஒன்னு
20 வாரத்துக்குள் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புள்ளது. நிறைய காரணங்களால் இது நடக்கலாம். வயசும் ஒரு முக்கிய காரணம். வயசு கூடக் கூட கருச்சிதைவு ஆபத்தும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் சொல்கின்றனர். 2019-ல் நடந்த ஒரு ஆய்வில், 25-29 வயசு உள்ளவர்களை விட 30-45 வயசு உள்ளவங்களுக்குத்தான் கருச்சிதைவு அதிகமா இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டு
35 வயசுக்கு அப்புறம் பிறக்கற குழந்தைகளுக்கு டவுன் சிண்ட்ரோம் உட்பட பிறவி குறைபாடுகள், எடை குறைவுனு பிரச்சினைகள் வர வாய்ப்புகள் அதிகம். இது குழந்தையோட ஒவ்வொரு வளர்ச்சி நிலையையும் பாதிக்கலாம்.
கர்ப்பம் தரிக்கறதுல சிரமம்:
மூன்று:
கர்ப்பம் தரிக்கறதுல சிரமம், இது 35 வயசுக்கு அப்புறம் வரக்கூடிய இன்னொரு பிரச்சினை.
நான்கு:
தைராய்டு பிரச்சினைகள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் இதெல்லாம் கர்ப்ப காலத்த சிக்கலாக்கும் மருத்துவ நிலைமைகள். இது இளம் வயதில் உள்ளவங்கள விட வயசு அதிகமான பெண்களுக்குத்தான் அதிகம்.
பிரசவத்துல சிரமம்:
ஐந்து:
ஹார்மோன் மாற்றங்கள் இல்லையென்றால் ஐவிஎஃப் மாதிரி கருத்தரிப்பு சிகிச்சைகள்ல 35 வயதுக்கு மேல் கர்ப்பம் தரிக்கறதுக்கு அதிக வாய்ப்பு அதிகம்.
ஆறு
35 வயசுக்கு மேல அம்மாக்களுக்கு பிறக்கற குழந்தைகளுக்கு டவுன் சிண்ட்ரோம் மாதிரி குரோமோசோம் பிரச்சினைகள் வர வாய்ப்பு அதிகம். ஏன்னா, முட்டையோட தரம் குறைந்திருக்கும்.
ஏழு
35 வயசுக்கு மேல உள்ள பெண்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், பிரசவத்துல சிரமம் ஏற்படலாம், எனவே சிசேரியன் தேவைப்படலாம்.
ஆபத்துகளை எப்படி குறைக்கறது?
1. சத்தான, சரிவிகித உணவ சாப்பிடுங்க.
2. ஆரோக்கியமான எடையை பராமரிக்க, தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்க. மது, புகை பிடிக்கறத விட்டுடுங்க. ஏன்னா, அது கருத்தரிக்கும் திறனையும், கருவோட வளர்ச்சியையும் பாதிக்கும்.
3. மன அழுத்தத்த குறைக்க யோகா, தியானம் செய்யுங்க.
4. குழந்தையோட வளர்ச்சிக்கு உதவும், பிறவி குறைபாடுகள் வர வாய்ப்ப குறைக்கவும் ஃபோலிக் அமிலம் உள்ள பிரசவத்துக்கு முந்தைய வைட்டமின்களை சாப்பிட ஆரம்பிங்க.
30 வயதை தாண்டி, நீங்கள் திருமணம் செய்து கொண்டால் குழந்தையை தள்ளி போடாமல் பெற்று கொள்ளுங்கள். இதுவே நிபுணர்களின் கருத்தாகவும் உள்ளது.